ரத்த தானம் பெயரில் விஜயா செய்யும் அட்ராசிட்டி, முத்துவை ஏளனம் செய்யும் அருண் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, க்ரிஷ் பாட்டி வந்து சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். கடைசியில் முத்து, மீனாவிற்காக பூ வாங்கி தந்தார். அதை பார்த்த மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அதை முத்து, மீனாவின் தலையில் வைத்தார். பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேலே சீக்கிரம் ரூம் கட்டிவிடலாம் என்று இருவருமே தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோடில் சத்யா, கிரிஷுக்காக பேரிச்சம்பழம் வாங்கி வந்து முத்துவிடம் கொடுத்தார். முத்து-மீனா இருவருமே அதை எடுத்துக்கொண்டு கிரிஷை பார்க்க மகேஸ்வரி வீட்டிற்கு போனார்கள். அங்கிருந்த கிரிஸ் அம்மா, முத்து- மீனாவிடம் எதுவுமே பேசவில்லை. இருந்தாலுமே, கிரிஸ்யிடம் முத்து ஜாலியாக விளையாடி இருந்தார். அவர்களை வெளியே அனுப்புவதில் கிரிஷ் அம்மா குறியாக இருந்தார். இதை கவனித்த மீனா, முத்துவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் ரோகினி, நான் சொல்வதை போல செய். அவர்களை கிரிசிடம் பழக விடாதே என்று தன்னுடைய அம்மாவை மிரட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் மீனா, விழாக்கள் நேரங்களில் பூவை கொடுத்து காசை வீணாக்குவதற்கு பதில் புது புதிதாக பழங்களைக் கொடுக்கலாம் என்று யோசித்தார். பின் அந்த புது பிசினஸ் ஐடியாவை முத்து விடம் சொன்னார் மீனா. பின் வீட்டில் இதைப் பற்றி முத்து சொன்னார். வழக்கம்போல மனோஜ்- விஜயா இருவருமே ஏளனமாக மீனாவை பேசி இருந்தார்கள். ஆனால் அண்ணாமலை திட்டி மீனாவை ஆசீர்வாதம் செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் புது பிசினஸை பற்றி அறிந்தவுடன் ஆர்டர் வருகிறது. இதனால் மீனா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மீனா, தன்னுடைய புது ஆர்டர் பற்றி சீதாவிடம் சொல்கிறார். அப்போது அருண், நீங்கள் அடுத்தடுத்து உங்கள் பிசினசில் முன்னேற வேண்டும். ஆனால், முத்து தான் கடைசிவரை டிரைவர் ஆக இருக்கனும். அவரை மதித்து சாப்பாடு கூட போடமாட்டார்கள் என்று ரொம்ப ஏளனமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு மீனாவும் தக்க பதிலடி கொடுக்கிறார். அதற்குப்பின் விஜயா, டாக்டர் பட்டத்திற்காக ரத்த தானம் கொடுப்பதை பற்றி வீட்டில் சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் விஜயா, வீட்டில் எல்லோரையும் ரத்த தானம் கொடுக்க பார்வதி வீட்டிற்கு வர சொல்கிறார். அதற்குப்பின் மீடியாவில் இருந்து வந்தவர்கள் விஜயா ஏற்பாடு செய்த ரத்த தானத்தை பேட்டி எடுக்கிறார்கள். விஜயா செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் எல்லோருக்குமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆகிறது. தான் நல்லவன் போலவே விஜயா, பேட்டி கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.