மீனாவை தனியாக சந்தித்து பேசும் ரோகினி, சந்தேகப்படும் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மீனாவை பார்த்து ஏளனமாக பேசி இருந்தார். அதோடு நீ வீட்டை விட்டு போன பிறகுதான் வீடே நன்றாக இருக்கிறது. ரோகிணி எல்லா வேலையும் செய்து கொண்டார். தயவு செய்து வீட்டிற்கு பக்கம் வந்து விடாதே என்று ரொம்ப மோசமாக திட்டி இருந்தார். மீனா எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அதற்கு பின் மீனாவை பார்க்க ஸ்ருதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் நடந்ததை எல்லாம் சுருதி சொல்லிவிட்டார்.
பின் சத்யாவும், முத்து தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை எல்லாம் சொன்னார். மீனாவின் அம்மா, இது ஒரு பெரிய விஷயம் என்று நீ வீட்டிற்கு வந்து விட்டாயா? மாப்பிள்ளை உடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்று அறிவுரை எல்லாம் சென்றார். ஆனால் மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை. அதற்குப்பின் சத்யா தன்னுடைய ஓனரின் மகள் ரேகாவை சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார். அப்போது சீதா, நீ காதலிக்கிறாயா? யார் இந்த பெண் என்றெல்லாம் கேட்டு விசாரித்தார். அதற்கு சத்யா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் ஓனரின் மகள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
ரேகாவிற்கு உடலில் பெரிதாக பிரச்சினை இல்லை என்று சீதா சொல்லி விடுகிறார். அதற்குப்பின் சத்யா அங்கு இருந்து கிளம்பியுடன் சிந்தாமணி வருகிறார். சிந்தாமணி, ரேகாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, குற்ற உணர்ச்சியில் தன்னுடைய அப்பாவிடம் மனதுக்குள்ளே புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து, மாலை அணிந்து வீட்டிற்கு வருகிறார். கார் செட்டில் பூஜை வைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக முறைத்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மீனாவின் அம்மா, சத்யா இருவருமே பூஜைக்கு வந்து விடுகிறோம் என்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். பின் அண்ணாமலை, முத்து மீது இருந்த கோபத்தில் தான் வீட்டை விட்டு வந்தாயே? வேற என்ன பிரச்சனை? நீ ஏதோ மறைக்கிறாய் என்று சொல்கிறார். ஆனால், மீனா உண்மையை சொல்லாமல் ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். அதற்கு பின் ரோகிணி ஃபோன் செய்து மீனாவை
வருகிறார். ரோகினி, உன்னுடைய அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை தானே என்று கேட்கிறார். அதற்கு மீனா, நான் எதுவும் சொல்லவில்லை. ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லவில்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன் என்கிறார். அதற்குப்பின் ரோகினி- மீனா ஒன்றாக வருவதை பார்த்து விஜயா முறைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=taG-wVIazzc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவிற்கு போன் செய்து தனியாக பேச ரோகினி அழைக்கிறார். கோபத்தில் மீனா, உன்னால் நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். ஒழுங்கு மரியாதையாக வீட்டில் உண்மையை சொல் என்று திட்டிவிட்டு வெளியே வருகிறார். ரோகினியும் மீனாவின் பின்னாடியே வருகிறார். இதை விஜயா பார்த்து விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த விஜயா, எங்கு சென்றாய்? யாரை பார்த்தாய்? என்று கேட்கிறார். ஆனால், ரோகினி உண்மையை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.