விஜயாவின் பயத்தால் வீட்டில் வெடிக்கும் கலவரம், ரோகினி ட்ராப்பில் சிக்கிய மனோஜ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், இந்த சாமியாடி என்னுடைய கடைக்கும் வந்து குறி சொன்னார் ரோகிணி தான் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவார் என்றார். இதைக் கேட்டு விஜயாவிற்கு கோபம் வந்தது. அது நடக்கக்கூடாது. நான் உனக்கு சீக்கிரமாகவே நல்ல பெண்ணை பார்க்கிறேன் என்றார். அதற்குப்பின் மனோஜ்க்கு போன் செய்த ரோகினி, ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு மனோஜ் சண்டை போட்டார். அப்போ ரோகிணி, நான் உன்னை விட்டு மொத்தமாக பிரிந்து விடுகிறேன். அதற்காக நான் சொல்லும் விஷயத்தை நீ செய்யணும். ஆனால், அந்த விஷயத்தை உன் அம்மாவிடம் கூட சொல்ல கூடாது என்றார். அதற்கு மனோஜ் ஒத்துக்கொண்டார்.
சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்துவதற்கு கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு சிந்தாமணி வைத்த சாமியாரை சுற்றி பல பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லோருமே இந்த சாமியார் சொல்வது உண்மையாக நடக்கிறது. சக்தி வாய்ந்த சாமியார் என்றெல்லாம் பில்டப் செய்தார்கள். இதனால் விஜயா நம்புகிறார். பின் விஜயாவை பார்த்த சாமியார், நான் சொன்னது தான் நடக்கும். ரெண்டாவது மருமகளை வீட்டை விட்டு அனுப்பவில்லை என்றால் உன் கணவர் உயிருக்கு ஆபத்து என்று இன்னும் பயமுறுத்தினார். இதனால் விஜயா பயந்து போய் பதறுகிறார்.
சிறகடிக்க ஆசை:
சிந்தாமணி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் மீனா தன் வீட்டில் நடந்ததை அம்மாவிடம் சொல்லி புலம்பினார். அப்போது மீனாவின் அம்மா ஒரு ஜோசியரை வீட்டிற்கு வரவைத்து மீனாவின் ஜாதகத்தை பார்க்க சொன்னார். அவர், ராசி எல்லாம் எந்த உயிருக்கும் ஆபத்து வராது. உங்கள் வீட்டில் ஒரு பெரிய கெட்டது நடக்கப்போகிறது. அதற்கு உன் மாமியார் சுமங்கலிகளை அழைத்து ஒரு பூஜை செய்தால் போதும் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் நடக்காது என்றார். மீனா, இதை நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பார்வதி ஆன்ட்டி மூலமாக சொல்ல வைக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்திக்க சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப சொல்லி பார்வதியிடம் கேட்கிறார். பார்வதி முடியாது என்கிறார். இதனால் கோபப்பட்டு விஜயா வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா ஜாதகம் பார்த்த விஷயத்தையும், ஜோசியர் வீட்டில் விளக்கேற்ற சொல்லி பூஜை செய்ய சொன்னதையும் சொல்கிறார். விஜயா ஒத்துக்கொள்ளவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஜயா. ஆனால், அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- ரவி எல்லோருமே அறிவுரை சொல்லியுமே விஜயா ஏற்றுக் கொள்ளவில்லை.
சீரியல் ட்ராக்:
பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் மனோஜ், ரோகினி சந்திக்க ஹோட்டல் போனார். அங்கு மனோஜ், விவாகரத்து கொடுக்க விருப்பம் என்று ஒரு டாக்குமெண்ட்டை ரெடி பண்ணி அதில் கையெழுத்து போட சொல்கிறார். ரோகிணி, அதற்கு முன்பு நான் கொடுக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போடு. அதில் விவாகரத்து வேண்டாம் என்று எழுதி இருக்கிறது. மனோஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே ரோகினி, நீ கையெழுத்து போடவில்லை என்றால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார். மனோஜ் பயந்து வெளியே தப்பிக்க பார்த்தார். ரோகினி விடவில்லை. பாத்ரூமுக்கு சென்ற மனோஜ், தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து சொல்கிறார்