எமதர்ம ராஜாவாக வந்த முத்து, பயத்தில் பதறிப்போன விஜயா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், மீனாவை சந்தித்து பேசினார். அப்போது மீனா, நீங்கள் செய்த தவறால் தான் அவர் கோபத்தில் இருக்கிறார். என்னால் எதுவுமே பேச முடியவில்லை என்று சொன்னார். உடனே சீதா, அப்பா இல்லாத கஷ்டம் இப்ப புரியுது என்று வேதனையாக புலம்பிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் திருடர்களை தான் தனியாக பிடித்தது போல அருண் பேட்டி கொடுத்திருந்தார். இதை முத்துவின் நண்பர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த முத்து, அந்த திருடனை பிடித்துக் கொடுத்தது நான் தான். இவன் பொய் சொல்கிறான். இதை நான் சும்மா விட மாட்டேன் என்று கோபப்பட்டார்.
ஸ்ருதி- ரவி இருவருமே புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்து நிறைய குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதைப் பார்த்து மீனாவுக்கு கோபம் தான் அதிகமானது. அப்போது முத்து, நான் அருண் செய்த வேலை எல்லாம் சொல்லி புலம்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து சீதா, மீனாவிற்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது மீனா, அருண் செய்த வேலையை சொன்னார். மறு நாள் காலையில் முத்து காப்பாற்றிய அந்தப் பெண் தன்னுடைய கணவருடன் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது அவர்கள், உங்கள் மகனால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றெல்லாம் முத்துவை புகழ்ந்து பேசினார்கள். அதற்குப்பின் முத்துவிற்கு தங்கச் செயினை பரிசாக கொடுத்திருந்தார்கள்.
இதை எல்லாம் சுருதி வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு விட்டார். இதை அருண், அவருடன் வேலை செய்யும் அதிகாரிகள் எல்லோருமே பார்த்து விட்டார்கள். பின் அருணுக்கு போன் செய்த உயர் அதிகாரி, நீ செய்தாய் என்று சொல்லி பாராட்டு வாங்கினாய். அந்த பெண்ணே முத்துவிற்கு பரிசு கொடுத்து இருந்தார். என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார். அருணால் எதுவுமே பேச முடியவில்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் உயர் அதிகாரி, அருண் மோசடி செய்தது அறிந்து திட்டி விட்டார். அருணுக்கு போன் செய்த சீதா, எதற்காக இப்படி செய்தீர்கள்? இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் நம்ம காதலுக்கு உதவியாக இருந்திருக்கும். நீங்கள் என் மாமாவின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டீர்கள் என்று கேட்டார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. அருணின் அம்மாவுமே, நீ செய்தது தவறு தான். இனி சீதா உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நான் வேறு ஒரு பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனாவை முத்து கோயிலுக்கு அழைத்துப் போனார். அங்கு தனக்கு கிடைத்த தங்க செயினை சீதாவிற்கு போட்டு அழகு பார்த்தார் முத்து.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரோகினி, நீங்கள் அத்தையை எப்படியாவது சாமியாரிடம் அழைத்து வந்து விடுங்கள். நானும் மனோஜூம் சேருவதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அதனால் பார்வதியுமே விஜயாவை சாமியாரை பார்க்க அழைத்தார். கடைசியில் சீதா, மீனா இருவருமே அருணை சந்தித்தார்கள். அப்போது அருண், இரண்டு வீட்டிலும் எங்களுடைய கல்யாணத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். நானும் சீதாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறோம் என்றார். இதனால் மீனா ஷாக் ஆனார்.
https://www.youtube.com/watch?v=0R5E2FxmfSY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எமதர்மன் வேடத்தில் முத்து வருகிறார். முத்துவை பார்த்தவுடன் விஜயா பயப்படுகிறார். சாமியார், உன்னை பார்க்க எமதர்மன் வருவான் என்று சொல்லி இருப்பார். அதை நினைத்துதான் விஜயா ரொம்பவே பயந்து கதறுகிறார். உடனே அண்ணாமலை, முத்து என்னடா வேஷம் இது? என்று சொல்கிறார். பின் விஜயா முத்துவை உத்து பார்க்கிறார்.