சிந்தாமணியை பழிவாங்க துடிக்கும் விஜயா, ரோகினி எடுத்த தடாலடி முடிவு -சிறகடிக்க ஆசை
சிந்தாமணியை பழிவாங்க நினைக்கும் விஜயா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து- மீனா இருவருமே போலிஸிடம் எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதற்குப்பின் முத்து, நீ சிந்தாமணியை பாலோ செய்து ரேகா இருக்கும் இடத்தை கண்டுபிடி என்று அனுப்பி வைத்தார். மீனாவும் சிந்தாமணியை பாலோ செய்து போனார். சிந்தாமணி அவருடைய கணவரும் ஒரு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நபரிடம் மீனா, பைனான்சியரிடம் பணம் வாங்க வேண்டும் என்றார். அந்த நபர், சிந்தாமணியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் சென்று பேசி என்றார். அதற்குப் பின் மீனா, அந்த பெண்ணிடம் பணம் வேண்டும் என்பது போலவே பேசி இருந்தார். அவர், ரேகா தான் உதவி செய்வார். ஆனால், அவர் காலையில் இருந்து வீட்டை விட்டு வெளிய வரவில்லை என்றார்.
முத்துவின் நண்பர் மிஸ்ரா, போலீஸ் இடம் சத்யாவை விடுதலை செய்ய சொல்லி கேட்டார். ஆனால், போலீஸ் ஒத்துக்கொள்ளவில்லை. மிஸ்ரா, இது முழுக்க முழுக்க பொய் கேஸ். ரேகா அவருடைய வீட்டில் தான் இருந்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நீங்கள் சத்யாவை விடுதலை செய்யவில்லை என்றால் கமிஷனரிடம் உங்கள் எல்லோர் மீதும் புகார் கொடுப்பேன் என்றார். இதனால் பயந்து போன போலீஸ், ரேகாவின் அப்பாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னார். அதற்கு பின் சத்யாவையும் விடுதலை செய்தார்கள். பின் மீனா-முத்து இருவரும் அருணின் செயலை கண்டித்து திட்டினார்கள்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் சத்யா விடுதலை ஆனதால் சிந்தாமணி பயங்கரமாக கோபப்பட்டார். அதோடு ரேகாவை உண்மையாலுமே கடத்திவிடலாம் என்று சிந்தாமணி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சத்யாவிடம் சந்திரா, மீனா, சீதா மூவருமே ரேகாவை மறந்துவிட சொல்லி வற்புறுத்துகிறார்கள். சத்யா, ரேகாவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். அப்போது வந்த முத்து, நீங்கள் இப்படி எல்லாம் கட்டாயப்படுத்தினால் ரேகா மருந்து குடித்து இறந்து விடுவாள். இவனும் ரேகா போன கவலையில் தற்கொலை செய்து கொள்வான். இதெல்லாம் தேவையா? என்று உண்மையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதனால் மீனாவும் சத்யாவின் காதலுக்கு சப்போர்ட் செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் அண்ணாமலை விசாரிக்கிறார்.
அப்போது முத்து, சத்யா-ரேகா இருவரும் காதலிக்கிறார்கள். சத்யாவின் வாழ்க்கையை காலி செய்ய தான் சிந்தாமணி இப்படி செய்திருக்கிறார் என்கிறார். இதைக் கேட்டவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். நான் சொன்னது போலவே பலித்து விட்டது. அவளுடைய மகள் ஒன்றும் இல்லாதவனை தான் இழுத்துக் கொண்டு ஓடுவாள் என்று சொன்னேன், அது உண்மையாகிவிட்டது என்று சொல்லி மீனாவின் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கொந்தளித்த முத்து, வழக்கம்போல தன்னுடைய அம்மாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அதற்கு விஜயா, என்ன நடந்தாலும் சத்யா, ரேகாவையே திருமணம் செய்து கொள்ளட்டும். அப்பதான் அந்த சிந்தாமணிக்கு புத்தி வரும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் முத்து தன்னுடைய குடும்பத்திற்காக செய்த உதவிக்கு மீனா நன்றி சொல்கிறார். பின் முத்து- மீனா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி சாப்பிடாமல் ரொம்பவே கவலையில் இருப்பதால் அவருடைய அம்மா வித்யாவை வீட்டிற்கு வர வைக்கிறார். ரோகினி, மனோஜ் அவருடைய அம்மா பேச்சை மட்டும் கேட்பதாக சொல்லி புலம்புகிறார். வித்யா, இதற்கு ஒரே முடிவு நீ மனோஜை விவாகரத்து செய்துவிடு. உன்னுடைய மகனுடன் சந்தோஷமாக வாழு என்கிறார். ரோகிணி, அதெல்லாம் முடியாது. நான் மனோஜுடன் தான் சேர்ந்து வாழ்வேன். என்ன நடந்தாலும் எனக்கு மனோஜ் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.