மீனாவை அவமானப்படுத்தி அனுப்பும் விஜயா, உண்மையை அறிவாரா முத்து? சிறகடிக்க ஆசை

By subhashini · 26/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முருகன், வித்யா இடையே அனிமோன் பஞ்சாயத்து நடப்பதால் முத்து. தீர்த்து வைத்தார் பின் முருகன் நிறைய குடித்து இருந்தால் அந்த பாட்டிலை பிடிங்கி சரக்கை முத்து குடித்து விட்டார். பின் வீட்டுக்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்றும் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். மீனா, முத்துவை குடிகாரன் என்றெல்லாம் சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. ஓரு கட்டத்தில் முத்து, குடிக்க போகிறேன் என்றார். குடித்தால் நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று மீனா சொன்னார்.

ரோகினி பற்றிய உண்மையை வெளியே சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மீனா, முத்துவுடன் சண்டை போட்டுவிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரோகிணி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். விஜயாவுமே போய் தொலையட்டும் என்று நிம்மதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை வருத்தப்பட்டார். பின் மீனாவிடம் அவருடைய அம்மா, நடந்ததை பற்றி விசாரித்தார். மீனா எதுவும் சொல்லாமல் வேதனையிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் ரோகினி, வீட்டு வேலை செய்ய மீனா வேண்டும் என்று மீண்டும் வந்து விடுவாரோ? என்று பயத்திலேயே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தார்.

சிறகடிக்க ஆசை:

இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து மீனா வரக்கூடாது என்று வேலை செய்வது போல இருக்கிறது என்று உண்மையை சொல்லி விட்டார். வழக்கம் போல விஜயா, மனோஜ் இருவருமே ரோகினிக்கு சப்போர்ட் செய்து முத்துவை திட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிடம் ரேகா அவரைப்பற்றி விசாரித்தார். அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்து சத்யாவை கூப்பிட்டார். முத்து நடந்தது எல்லாம் சொன்னார். உடனே சத்யா, எல்லாம் மாறிவிடும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அக்கா சீக்கிரம் வந்து விடுவாள் என்று ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா பூ கொடுப்பதற்காக பார்வதி வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த விஜயா, மீனாவை பார்த்து ஏளனமாக பேசுகிறார். அதோடு நீ வீட்டை விட்டு போன பிறகுதான் வீடே நன்றாக இருக்கிறது. ரோகிணி எல்லா வேலையும் செய்து கொள்கிறார். தயவு செய்து வீட்டிற்கு பக்கம் வந்து விடாதே என்று ரொம்ப மோசமாக திட்டுகிறார். மீனா எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார். அதற்கு பின் மீனாவை பார்க்க ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார். அப்போது வீட்டில் நடந்ததை எல்லாம் சுருதி சொல்லிவிடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் சத்யாவும், முத்து தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை எல்லாம் சொல்கிறார். மீனாவின் அம்மா, இது ஒரு பெரிய விஷயம் என்று நீ வீட்டிற்கு வந்து விட்டாயா? மாப்பிள்ளை உடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்று அறிவுரை எல்லாம் செல்கிறார். ஆனால் மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை. அதற்குப்பின் சத்யா தன்னுடைய ஓனரின் மகள் ரேகாவை சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறார். அப்போது சீதா, நீ காதலிக்கிறாயா? யார் இந்த பெண் என்றெல்லாம் கேட்டு விசாரிக்கிறார். அதற்கு சத்யா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் ஓனரின் மகள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full