மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜயா, மனோஜை தேடி வரும் புது பிரச்சனை, ரோகினி காப்பாற்றுவாரா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், 4 லட்சத்தை ஏமாற்றியதற்கு ரோகிணி பொறுப்பேற்று, 2 லட்ச ரூபாயை முத்துவிடம் கொடுத்து விட்டார். பின் அண்ணாமலையின் 29 லட்சத்தை மனோஜ், மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டார். ஆனால், விஜயா, உன் அப்பாவிடம் பணம் வாங்கி கொடுத்து விடு என்று ரோகினியிடம் சொல்லிவிட்டார். இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்ப, அவர் பரிகாரங்களை செய்து வருகிறார்.
மேலும், கடந்த வாரம் கிரிஷ் பிறந்த நாளுக்காக, கேக் வெட்டி கொண்டாட ரோகிணி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார். பின், புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து விசாரித்தார். ஆரம்பத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்த கிரிஷ் பாட்டி, இறுதியில் தனது மகள் பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்லிவிட்டார்.
சிறகடிக்க ஆசை:
ரோகிணி தான் தனது மகள் என்று அவர் சொல்லவில்லை. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்து- மீனா, கிரிஷ் அம்மா செய்தது தவறு என்று கூறிவிட்டு பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள். அதற்குப் பின் ரோகினி தனது அம்மாவிடம் கோபமாக, முத்து- மீனாவிடம் போனில் கூட பேசக்கூடாது. அவர்கள் வந்தால் கூட முகம் கொடுத்து பேச வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். பின் முத்து-மினா வீட்டிற்கு வரும் வழியில், கிரிஷை தத்து எடுக்க வேண்டும் என்று, ஒரு கோவிலில் சீட்டு குலுக்கி போட, வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்பட்டார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் சேர்ந்ததால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். அப்போது புதிய காதல் ஜோடி சேர்ந்து, சந்திப்பதற்கு இடமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து- மீனா, கிரிஷை குறித்து அனைவரிடமும் சொல்கிறார்கள். பின், கிரிஷ் அம்மாவை விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கொண்டு கேட்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
மேலும், நேற்று எபிசோடில் கிரிஷை பற்றி சொன்னவுடன் விஜயா, கண்டவர்கள் எல்லாம் வந்து இருக்க இது என்ன சத்திரமா? என்று கோபப்பட முத்து, கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நிற்கிறார். பின் ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். கடைசியில், இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் குழந்தை பெத்துக்க வேண்டும் என்று தனது தோழியுடன் சேர்ந்து ரோகிணி பிளான் போட்டார். இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சீதா பாஸ் பண்ண விசயத்தை மீனா- முத்து வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். அதை மனோஜ், விஜயா கிண்டல் கேலியாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் சீதா பாஸ் ஆனதற்கு எல்லோருமே ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார்கள். அந்த சமயம் அங்கு வந்த மீனாவை பார்த்து சீதா கட்டிப்பிடித்து அழுகிறார். பின் எல்லோரும் சந்தோசமாக பேசி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கடையில் ரோகினி, மாதம் 50,000 கொடுப்பதை பற்றி பேச, மனோஜ் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் சீரியல் முடிகிறது.