ஸ்ருதியின் அம்மா செய்த வேலையால் வீட்டை விட்டு வெளியேறும் விஜயா, மீனா சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 10/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் வீட்டில் வசதி இல்லை என்றாலும் அண்ணாமலையை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். ஸ்ருருதி வீட்டில் வசதி இருந்தாலும் விஜயா தனக்கேற்றவாறு இல்லாமல் கஷ்டப்பட்டார். சுருதியின் வீட்டில் செய்யும் சாப்பாடு எதுமே விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சாப்பிட முடியாமல் விஜயா ரொம்பவே கஷ்டப்பட்டார். ஸ்ருதியின் அம்மா இதுதான் சந்தர்ப்பம் என்று நக்கலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் மனோஜ், கொசுத்தொல்லை, சந்தோஷின் குறட்டை, எலி தொல்லை என்று ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

எலியை பிடிப்பதற்காக எலி கூண்டை வைத்துக்கொண்டு இரவு முழுக்க மனோஜ் சுற்றிக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் அறிந்த சிந்தாமணி, ரோகினியை வரவைத்து விஜயா குடும்பத்தை பற்றி சொன்னார். மனோஜை உன் வசம் கொண்டு வர இதுதான் சந்தர்ப்பம். என்றார். ரோகினியும் மனோஜை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக யோசித்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

ரோகிணி, மனோஜை சந்தித்து பேசி இருந்தார். மனோஜ், ஷோரூமில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதை எல்லாம் சொல்லி புலம்பினார். ரோகினி, நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று மனோஜை தன் பக்கம் இழுக்க பார்த்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ஓட்டலில் முத்து-மீனா எல்லோருமே வீட்டை விற்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது வந்த ஸ்வேதா, பெரிப்பா பெரியம்மா இருவரும் என் வீட்டில் தங்கி கொள்ளட்டும். நான் 5 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்றார். முத்து, உன்னுடைய நல்ல மனதிற்கு ரொம்ப நன்றி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ஸ்ருதியின் அம்மா, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி வீட்டில் உள்ள எல்லா ரூம்களையும் பூட்டிவிட்டு விஜயா இருக்கும் ரூமை மட்டும் பூட்டாமல் சென்றார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கடுப்பானது. பின் பார்வதிக்கு போன் செய்த விஜயா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. நான் உன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்றார். பார்வதி, நீ என்னுடைய வீட்டிற்கு வருவதாக இருந்தால் அண்ணாமலை அண்ணாவையும் அலைத்துக் கொண்டு வா. அண்ணாமலை அண்ணா இருக்கும் இடத்திற்கு போ என்றார். இதனால் விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது.

https://www.youtube.com/watch?v=_qrDseQ18fU

சீரியல் ப்ரோமோ:

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ஸ்ருதியின் அம்மா வீட்டில் எல்லோருமே குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என்று இருக்கிறார்கள். அதோடு விஜயாவையும் நடனமாட சொல்லி வம்பு இழுக்கிறார்கள். கோபத்தில் விஜயா, ஸ்ருதியின் அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு மனோஜ் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறார். அங்கு தூங்க முடியாமல் சாப்பிட முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறார் விஜயா. இதை அறிந்து அண்ணாமலை, முத்து, மீனா எல்லோருமே வந்து விடுகிறார்கள். மீனா, உங்களுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து தருகிறேன் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கிறார். விஜயா அமைதியாகவே இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full