கோயிலில் விஜயா-மனோஜ் செய்யும் அட்ராசிட்டி, லோன் கேட்டு அலையும் மீனா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து, என்னைக்குமே சுய கௌரவம் என்பது ரொம்ப முக்கியம். அவர்கள் ரெஸ்டாரன்ட் வைத்து கொடுப்பதற்கு ஒத்துக்காதே என்று சொன்னார். உடனே மனோஜ், அது எப்படி இருந்தாலும் உங்களுக்கு தானே வர போகிறது. அவன் நீ வளரக்கூடாது என்று நினைக்கிறான் என முத்துவை ஏளனமாக பேசி இருந்தார். அதற்கு ரவி, யாருடைய பணமும் தேவையில்லை என்று சுயமரியாதையுடன் இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, சுருதி, ரோகினி மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி-மீனா இடையே வாக்குவாதம் வந்தது.
உடனே ஸ்ருதி, தன்னுடைய அப்பா பணத்தில் ரெஸ்டாரண்ட் வைப்பதில் தவறு இல்லை என்பது போலவே பேசி இருந்தார். மறுநாள் காலையில் மீனாவுக்கு புதிய ஆர்டர் கிடைத்தது. மீனா, அந்த மேனேஜர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டு கிளம்பி இருந்தார். அதற்கு பின் வந்த சிந்தாமணி, நான் சொல்வது போல செய்து முடித்தாயா? இனிமேல் தான் மீனாவுக்கு இருக்கு ஆட்டம் என்று சிரித்தார். பின் வீட்டிற்கு வந்த மீனா, தனக்கு கிடைத்த புதிய ஆர்டர் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், வழக்கம் போல் மனோஜ்,விஜயா இருவருமே மீனாவை கிண்டல் கேலி செய்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அண்ணாமலை, மீனாவிற்கு புதிய ஆர்டர் கிடைத்ததற்கு பாராட்டி வாழ்த்து சொல்லி இருந்தார். பின் சிந்தாமணிக்கு போன் செய்த விஜயா, மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சொன்னார். உடனே சிந்தாமணி, இந்த ஆர்டரை கொடுத்ததே நான் தான். உங்கள் மருமகளுக்கு இது தான் கடைசி ஆர்டர். அதற்குப்பின் அவள் இந்த தொழிலுக்கே வர முடியாது. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று சொல்ல, விஜயா என்ன திட்டம்? என்று கேட்டார். அதை பொறுத்திருந்து நீங்களே பாருங்கள். இப்போது சொன்னால் சுவாரசியம் இருக்காது என்று சிந்தாமணி சொன்னார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு அண்ணாமலையின் நண்பர் . அவர் பவானி திருமணத்திற்கான ஏற்பாடுகளை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலையும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக சொன்னார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் முத்துவிற்கு ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. 7 நாட்கள் டூர், அதனால் பணமும் கொஞ்சம் அதிகமாக வரும் என்று ஒத்துக் கொண்டார். இதை வீட்டில் சொன்னவுடன் அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம்போல் விஜயா, முத்து-மீனாவை திட்டிக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, அண்ணாமலை இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் சவாரி இருக்கிறது என்று முத்து கிளம்புகிறார். அப்போது கோயிலில் விஜயா, வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக மனோஜ், ரோகினி இருவரையும் அங்கபிரதசனும் செய்ய சொல்கிறார். மனோஜ் முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறார். ஆனால், விஜயா வேண்டுதல் என்பதால் செய்தே தீர வேண்டும் என்று இருவரையும் கோயிலில் உருட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து பயங்கரமாக கலாய்த்து தள்ளுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புது ஆர்டருக்காக பணம் வாங்குவதற்காக பேங்கில் லோன் கேட்டு முயற்சி செய்கிறார். ஆனால், அவர்கள் முடியாது என்று சொல்கிறார்கள். அங்கிருந்த நபர் ஒருவர், பினான்சியரின் அட்ரஸ் கொடுத்து பண உதவி கேட்க சொல்கிறார். அப்போது போன் செய்த ரவி, உங்களுடைய ஆர்டருக்கு பண உதவி நாங்கள் செய்கிறோம். எவ்வளவு வேண்டும் என்று சொல்லுங்கள் என கேட்கிறார். அதற்கு மீனா, வேண்டாம். நான் பினான்சியரை பார்க்க போகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் மீனா தன்னுடைய தம்பி சத்யாவுடன் சேர்ந்து பினான்சியரை பார்க்க போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.