மனோஜ் செய்த முட்டாள் தனத்தால் கொந்தளித்த விஜயா, ரோகினியின் ஆட்டம் ஆரம்பம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், உன் லைசன்சை கேன்சல் செய்து வேலை செய்ய விட மாட்டேன் என்று சவால் விட்டார். செல்வம் மன்னிப்பு கேட்டும் அருண் மனம் இறங்கவில்லை. முத்துவை பழி வாங்குவதாக நினைத்து செல்வத்தை பழி வாங்கினார். அதற்குப்பின் கோர்ட்டில் மனோஜ்- ரோகினி விவாகரத்து கேஸ் நடக்கிறது. கோர்ட்டுக்கு வந்த ரோகிணி நக்கலாக விஜயா விடம் நலம் விசாரித்துவிட்டு மனோஜிடம் பேசி இருந்தார்.
கோர்ட்டில் மனோஜ் தரப்பில் வழக்கறிஞர், வித்யாவை விசாரிக்க அழைத்தார். வித்யா, ரோகினி பற்றிய எல்லா உண்மையும் சொன்னார். உடனே ரோகினி, வித்யா பொய் சொன்னார். வித்யாவின் கணவர் முருகன், முத்துவிற்கு நல்ல நண்பர். அதனால் தான் பொய் சொல்கிறார் என்றார். பின் ரோகினி, முருகனை விசாரித்தார். ரோகிணி மாத்தி மாத்தி கேட்ட கேள்வியில் முருகன் சிக்கிக் கொள்கிறார். இதனால் வித்யாவின் ஆதாரத்தை கோர்ட் எடுத்துக் கொள்ளவில்லை.
சிறகடிக்க ஆசை:
அதற்கு பின் மலேசியா மாமாவாக நடித்த மணியை விசாரித்தார்கள். மணியும் எல்லா உண்மையும் சொன்னார். அப்போது ரோகிணி, இவரும் பொய் சொன்னார். என் கணவர் அவருக்கு பணம் கொடுத்து நடிக்க சொன்னார் என்றார். ரோகிணி ஏற்கனவே மனோஜ் மொபைலில் இருந்து பணம் அனுப்பி இருந்தார். அந்த ஆதாரத்தை ரோகினி கோர்ட்டில் காட்டினார். இதனால் எல்லா சாட்சிகளும் மனோஜ்க்கு எதிராகவே திரும்பி நிற்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நீதிபதி, மனோஜ் தரப்பில் கொண்டு வந்த ஆதாரங்கள் எதுவும் செல்லாதது. அடுத்து இவர்கள் இருவரையும் கவுன்சிலிங் அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்.
வக்கிலுமே மனோஜை திட்டிவிட்டு அங்கிருந்து செல்கிறார். ரோகினி, தயவு செய்து என்னை மன்னித்து வாழவிடுங்கள் என்று கேட்கிறார். விஜயா, அது உன் கனவில் கூட நடக்காது என்று சொல்கிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதன் பின் வீட்டிற்கு வந்த விஜயா, மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை, ரோகினி வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு ஆர்டர் வேண்டாம். அவளை கடையில் சேர்க்காதே என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜ், நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். அந்த ஆர்டர் வேண்டும் என்று சொல்கிறார். இதனால் கொந்தளித்த விஜயா, மனோஜை அடிக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே மனோஜ் கடன் வாங்கியதற்காக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் மனோஜ்-விஜயா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜயா, உனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல். நான் சிந்தாமணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தருகிறேன். அந்த ரோகினி முகத்தில் விட்டெறிந்து அவளை கடைக்கு வர விடாமல் செய் என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட மீனா, முத்துவிடம் சொல்கிறார். அதற்குப்பின் கடைக்கு வந்த ரோகினியை உள்ளே விடாமல் மனோஜின் நண்பரும் பிஏவும் தடுக்கிறார்கள்.