டயட்டால் வந்த வினை, மீண்டும் பிரச்சனையில் சிக்கிய விஜயா- மனோஜ், விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து அருணுக்கு சஸ்பெண்ட் ஆன விஷயத்தை மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் மீனா, இதெல்லாம் ரொம்ப தப்பு. ஒருவரை பழிவாங்க கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். அதனால் மீனா- முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. இன்னொரு பக்கம் நடன வகுப்பிற்கு வெயிட் மெஷினை காதல் ஜோடி கொண்டு வந்து தந்தார்கள். அப்போது ஒவ்வொருவருமே ஏறி நின்று வெயிட் பார்த்தார்கள். விஜயாவின் வெயிட்டை பார்த்து பார்வதி, சிந்தாமணி இருவருமே கிண்டல் செய்தார்கள்.
விஜயா, வெயிட் மிஷின் காமிக்கவில்லை என்று எல்லோருமே கிண்டல் கேலி செய்து பயங்கரமாக சிரித்தார்கள். இதனால் விஜயாவிற்கு கோபம் வந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக சொல்லி விஜயாவை உசுபேத்தி விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, கடையில் வியபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொருள் வாங்க வந்த பெண்ணை பார்த்து மனோஜ் ஜொள்ளு விட, இதெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கோவம் வந்தது. அந்த சமயம் பார்த்து கிரிஷ் பாட்டி, ரோகினிக்கு போன் செய்து பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதை பற்றி சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
ரோகினியும், நீங்க பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்குப்பின் மீனாவிற்கு முத்து வண்டி ஓட்டுவதை சொல்லிக் கொடுத்திருந்தார். அங்கு வந்த மீனாவின் தோழிகள் அதை பார்த்து பெருமையாக முத்து-மீனாவை பற்றி பேசி இருந்தார்கள். நேற்று எபிசோடில் அருண், மார்க்கெட்டில் காய் வாங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்த முத்து, அவரிடம் வம்பு வாங்க சோசியல் மீடியாவில் வீடியோ போட்ட விஷயத்தை சொன்னவுடன் அருண் பயங்கரமாக கோபப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைதடி அளவிற்கு சண்டை ஆனது. அப்போது அருண் எதிர்பாராத விதமாக கீழே விழ போனார்.
நேற்று எபிசோட்:
முத்து பிடிக்க போய் அவர் சட்டை பாக்கெட் கிழிந்து விட்டது. இதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து சிரித்ததால் அருணுக்கு கோபம் அதிகமானது. முத்துவின் மீது இருக்கும் பகை இன்னும் அதிகமானது. அதன்பின் வீட்டில் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருந்தார். விஜயா டயட் இருப்பதாக சொல்லி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டார். அதன் பின் பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங் இருப்பதால் அண்ணாமலை கிளம்பி இருந்தார். அதற்குப்பின் பள்ளியில் கிறிஸ், அவருடைய பாட்டியையும் பார்த்து மீனா- முத்து இருவரும் பேசினார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி ஏதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்.
சீரியல் ட்ராக்:
இதனால் முத்து- மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் வீடியோ கால் மூலம் பேரன்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதற்காக ரோகிணி பயங்கரமாக கெட்டப் எல்லாம் போட்டார். அப்போது க்ரிஷ் அந்த பள்ளியில் தான் படிக்கிறார் என்ற உண்மை அண்ணாமலைக்கு தெரிய வந்தது. அதற்குப்பின் வீடியோ கால் மூலம் ரோகினி டீச்சரிடம் பேசி இருந்தார். அதை அண்ணாமலை உன்னிப்பாக கவனித்தார். தன் மாமனாரிடம் மாட்டிக்கொள்வோமா? என்று ரோகினி பயப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மனோஜ், டயட்டீஷன் என்று ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=CPbjakc33i8
சீரியல் ப்ரோமோ:
அவர் சொன்ன கசாயத்தை எல்லாம் மனோஜ்- விஜயா இருவருமே குடிக்கிறார்கள். இதை முத்து கிண்டலும் செய்கிறார். ஆனால், அவர்கள் அதை பற்றி கவலை கொள்ளவில்லை. பின் குடும்பமே சேர்ந்து பீட்சா சாப்பிட்டார்கள். அதை பார்த்து மனோஜ்,விஜயா இருவருக்கும் ஆசை வருகிறது. ஆனாலும், டயட்டில் இருக்கணும் என்று அவர்கள் சாப்பிடவே இல்லை. அதற்குப்பின் இரவு விஜயா-மனோஜ் இருவருக்குமே வயிறு கலக்குகிறது. இருவருக்குமே வயிறு சரியில்லாததால் மாத்தி மாத்தி பாத்ரூம் போய் கொண்டு இருக்கிறார்கள். இதை பார்த்த மொத்த குடும்பமே சிரிக்கிறது. பின் இருவருமே டயட் வேண்டாம் என்று முடிவு எடுத்து விடுகிறார்கள்.