சுருதி வீட்டில் விஜயாவுக்கு வந்த சோதனை, ஷோரூமில் அல்லல்படும் மனோஜ் - பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 7/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீல் சொன்னதை முத்து- மீனா இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. பின் சோகத்துடன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அண்ணாமலை, என்ன ஆனது என்றார். முத்து, கோர்ட் லீவ் என்பதால் ஜப்தி ஆர்டரை கேன்சல் செய்ய முடியாது என்று வக்கீல் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். இதைக் கேட்டு அண்ணாமலை உடைந்து போனார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று சொல்லி கதறினார். இதெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. வழக்கம்போல மனோஜ், இந்த வீட்டை விற்று விடலாம் என்றார். முத்து-ரவி இருவரும் மனோஜை திட்டினார்கள்.

பின் முத்து, அவர்கள் நம்மை வீட்டை விட்டு வெளியே அனுப்பி சீல் வைப்பதற்குள் நாமே இங்கிருந்து சென்றுவிடலாம் என்றார். அண்ணாமலைக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. மீனா, எல்லோரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். விஜயா இவ்வளவு நடந்துமே மீனாவின் குடும்பத்தை தரக்குறைவாக பேசி இருந்தார். பின் சுருதி வீட்டிற்கு செல்வதாக விஜயா சொன்னார். அண்ணாமலை, மீனாவின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். பின் அண்ணாமலை- விஜயா இருவருமே பிரிந்து ஒவ்வொரு திசைக்கு சென்றார்கள்.

சிறகடிக்க ஆசை:

இன்றைய எபிசோட்டில் விஜயா, ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார். அங்கு சுருதின் அம்மா நடந்ததை விசாரித்து, ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் காபி என்ற பெயரில் கிரீன் டீ கொடுக்கிறார். விஜயாவினால் அதை குடிக்கக்கூட முடியவில்லை. விஜயா முகம் சுழித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அண்ணாமலையை மீனாவின் குடும்பத்தார் ரொம்பவே அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் அண்ணாமலைக்கு வருத்தமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் முத்து-மீனாவை அவமானப்படுத்துவதற்காக சிந்தாமணி வருகிறார். ஆனால், அதற்கு முன்பே முத்துவின் வீடு பூட்டி இருப்பதை பார்த்து விடுகிறார். சிந்தாமணி, நம்மிடம் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக தான் முத்து அவன் குடும்பத்தை அழைத்து சென்று விட்டான். அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று வீட்டிற்கு சீல் வைக்க சொல்லி நோட்டீஸ் ஓட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், சந்தோசஷ் இடம் வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=LN94LLvwVLI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்ருதியின் அம்மா செய்யும் சாப்பாடுகள் எதுவுமே விஜயாவிற்கு பிடிக்கவில்லை. எல்லாமே கேரளாவில் இருக்கும் சமையல் போலவே இருக்கிறது. சாப்பிட முடியாமல் விஜயா தவிக்கிறார். இன்னொரு பக்கம் ஷோரூமில் மனோஜ் தூங்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறார். எலி தொல்லை, சந்தோஷின் குறட்டை என்று பிரச்சனை மேல் ப்ரச்சனை வந்து தவித்துக் கொண்டிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full