சிந்தாமணி பேச்சை கேட்டு பிரச்சனையில் சிக்கிய விஜயா, ரோகினி கொடுத்த புகார் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ், முத்து-மீனா செய்த செயலைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் இரண்டு கிராம் நகையையும் பரிசாக கொடுத்தார்கள். அதைப் பார்த்து விஜயா கோபப்பட்டார். பின் ரூமில் விஜயா, இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான். அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்றார். ரோகினிக்கு போன் செய்த மனோஜ், நான் உன்னிடம் பேச வேண்டும். நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூப்பிட்டார். மனோஜ் சொன்னதால் ரோகிணியுமே ரொம்ப சந்தோஷமாக அந்த இடத்திற்கு கிளம்பினார்.
ஷோரூம்க்கு ரோகிணி வந்து விட்டார். ஆனால், அங்கு விஜயா- மனோஜ் இருந்தார்கள். விஜயாவை பார்த்தவுடன் ரோகினி ஷாக் ஆனார். பின் மனோஜின் நண்பர், ஏற்கனவே ரோகிணி ஏற்பாடு செய்த சாட்டையடிப்பவரை அழைத்துக் கொண்டு வந்தார். அதை பார்த்து ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. விஜயா, சாமியாரை வைத்து என்னை முட்டாளாக்கி விட்டாய். அதற்கு பாடம் புகட்ட தான் அவரை வைத்தேன் என்றார். பின் சாட்டையடிப்பவரை வைத்து ரோகினியை அடிக்க வைத்தார். அவர் அடித்த அடியில் ரோகினி மயங்கி விழுந்தார்.
சிறகடிக்க ஆசை:
மனோஜ், தண்ணீரில் தெளித்து ரோகிணியை எழுப்பினார். ரோகினி, உன் அம்மா இதற்கான பதில் சொல்லனும். உங்க அம்மாவை சும்மா விடமாட்டேன் என்றார். அதற்குப்பின் ரோகினியை பார்க்க வந்த சிந்தாமணி, அந்த சாமியாரிடம் நான் தான் உன் பெயரை சொல்ல சொன்னேன். நானும் மாட்டி கொண்டால் விஜயாவின் திட்டத்தை கண்டுபிடிக்க முடியாது என்றார். இன்னொரு பக்கம் ஸ்வேதா, ஸ்ருதி, மீனா, முத்து, ரவி எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த பெண்கள் பாதுகாப்பு அதிகாரி, ரோகினியை விஜயா கொடுமைப்படுத்தியதால் திட்டி கேள்வி கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மாதர் சங்கம், ரோகினியை எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கிறார். விஜயா, இல்லை என்று பொய் சொல்கிறார். அப்போது அங்கு வந்த ரோகிணி, இவர்கள் தான் என்னை ஆள் வைத்து அடித்தார்கள் என்று நடந்ததை எல்லாம் ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றி விடுகிறார். கோபத்தில் மனோஜ், நாங்கள் அந்த அளவுக்கெல்லாம் அடிக்கவில்லை என்று தன் அம்மாவையே போட்டுக் கொடுத்து விடுகிறார். விஜயாவும் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக் கொள்கிறார். இதனால் மாதர் சங்கம், மனோஜ்- ரோகிணி இருவரையும் சேர்ந்து வாழவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கோர்ட்டில் சந்திக்கிறேன்.
சீரியல் ட்ராக்:
நீங்கள் கோர்ட்டில் பதில் சொல்லுங்கள் என்று மிரட்டி விட்டு செல்கிறார். இதனால் முத்து-மீனா, வக்கீலை சந்தித்து பேசுகிறார்கள். வக்கீலுமே, விஜயா செய்த வேலையை திட்டி மாதர் சங்கத்திடம் பேசி மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதை மீனா, விஜயாவிடம் சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வருகிறார். அப்போது சிந்தாமணி, மாதர் சங்கத்திற்கு லஞ்சம் கொடுத்தால் அமைதியாகி விடுவார்கள் என்று சொல்லி தன்னை பணத்தை கொடுக்கிறார். பின் சுருதி, ரவியின் ரெஸ்டாரண்ட்க்கு மாதர் சங்கத்தை வரவைத்து விஜயா பேசுகிறார். அவர்கள் ரோகினிக்கு சப்போர்ட் செய்து தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜயா, தன்னுடைய லஞ்சத்தை பணத்தை அவர் பையில் வைத்து விடுகிறார். இதையெல்லாம் அவர் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்.