மனோஜிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க திட்டம் போடும் விஜயா, ரோகினி நிலை? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, என் குடும்பம், என்னுடைய மாமாவின் சம்மதமும் இல்லாமல் நம்முடைய திருமணம் நடக்காது. என்னை மறந்து விடுங்கள் என்று சொன்னார். அருண் எடுத்து சொல்லியுமே சீதா கேட்கவில்லை. அதன்பின் வீட்டுக்கு வந்த சீதா, நான் இனிமேல் அருணை பார்க்க மாட்டேன். அவரிடம் இந்த திருமணம் நடக்காதுன்னு சொல்லிவிட்டேன் என அழுது கொண்டே சொன்னார். இதையெல்லாம் பார்த்து சத்யா, முத்துவிடம் சீதாவின் காதலை பற்றி பேச நினைத்தார். இன்னொரு பக்கம் முத்துவின் வீட்டிற்கு மலேசியா மாமா வந்தார்.
அவரை பார்த்தவுடன் விஜயா ருத்ரதாண்டவம் ஆடி இருந்தார். அப்போது மலேசியா மாமா, ரோகினியிடம் நலம் விசாரித்துவிட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். பின் மலேசியா மாமா, நான் செய்தது மிகப்பெரிய தவறு தான். இருந்தாலும் ரோகினியின் வாழ்க்கைக்காக தான் நான் பொய் சொன்னேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அண்ணாமலை எல்லாத்தையும் மறந்து மன்னித்து விட்டார். அதற்குப்பின் முத்து, சீதாவிற்காக பார்த்த மாப்பிள்ளை பற்றி விசாரிக்க கம்பெனிக்கு போனார். அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவரும் மாப்பிள்ளை பற்றி குறை சொல்ல, முத்துவிற்கு இந்த சம்மந்தம் வேண்டாம் என்று வந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
மீனா- சத்யா இருவருமே முத்துவை சந்தித்து சீதாவின் காதல் விஷயமாக பேசி இருந்தார்கள். அதைக் கேட்டவுடன் முத்து பயங்கரமாக கோபப்பட்டார். பின் சத்யா, சீதாவினுடைய நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீனா- சத்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் ரெஸ்டாரண்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதற்கு இடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு அதில் விருப்பமே இல்லை. இருந்தாலுமே ஸ்ருதி ரெஸ்டாரன்ட் தொடங்குவதில் உறுதியாக இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
பின் இதைப் பற்றி ரவி, முத்து- மீனாவிடம் பேசினார். மீனா, சுருதி சொல்வது சரிதான். அவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்றார். உடனே முத்து, நீ சுயமாக சம்பாதித்து ரெஸ்டாரன்ட் தொடங்கு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொன்னார். பின் மீண்டும் மீனா, சீதாவின் காதல் விஷயமாக முத்துவிடம் பேச, அவர் இன்னும் அதிகமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, பாய் பிரண்டிடம் பேசுவது போல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்டு மனோஜ் கோபப்படுகிறார் என்று தெரிந்துமே ரோகினி காதலரிடம் பேசுவது போல் பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய நிலையில் இன்றைய எபிசோட்டில் நீத்து, முத்துவின் வீட்டிற்கு வருகிறார். நீத்துவை பார்த்தவுடன் ஸ்ருதி கோபப்படுகிறார். அப்போது நீத்து, புதிய ரெஸ்டாரன்ட் தொடங்குகிறேன். அதற்கு ஷேர் பார்ட்னர் ரவி தான். அதற்கான டாக்குமெண்ட்டை எடுத்து வந்திருக்கிறேன். அதில் ரவி சைன் போட்டால் போதும். ரெஸ்டாரன்ட் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் இல்ல ரவியும் ஒரு முக்கிய காரணம். சுருதி சொன்னது சரி தான் என்று பேசுகிறார். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
அதற்குப்பின் சுருதி- ரவி இருவருமே தனியாக சென்று ரெஸ்டாரன்ட் பற்றி பேசுகிறார்கள். அப்போது விஜயா, ரெஸ்டாரண்டிற்கு எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
நீத்து, 60 கோடி ஆகும். அதை எல்லாம் அப்பா பார்த்துக் கொள்ளுவார். எங்களுக்கு சென்னையில் மட்டும் இல்லை மும்பையிலும் 10 பிரான்ச் இருக்கிறது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளக்கிறார்.
உடனே விஜயா, ரோகினியை கழட்டி விட்டு எப்படியாவது நீத்துவை மனோஜிற்கு திருமணம் செய்து வைக்க யோசிக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு கோவம் தான் வருகிறது. பின் ரவியும் விருப்பமே இல்லாமல் டாக்குமெண்டில் சைன் போடுகிறார். இன்னொரு பக்கம் சீதா அருணை நினைத்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு பக்கம் சத்தியா, சீதாவின் திருமணத்தை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார். ஆனால், அவர் மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு என்கிறார். மீனாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார். ஆனால், சீதாவின் அம்மா மனமே மாறவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது