மனோஜிக்கு விஜயா போட்ட கண்டிஷன், வேதனையில் தவிக்கும் ரோகினி - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 5/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், என்னிடம் ஏற்கனவே ரோகினி சொல்லிவிட்டாள். நான் அம்மா திட்டுவார்கள் என்று தான் சொல்லவில்லை என்றார். உடனே விஜயா, மனோஜை அடித்தார். இருந்தாலுமே மனோஜ், ரோகினிக்கு சப்போர்ட் செய்தார். ஆனால், ரோகினி அமைதியாக இருந்தார். அதற்குப்பின் பாட்டி, எதற்காக பொய் சொன்னாய்? என்று கேட்டார். அதற்கு ரோகினி, எனக்கு மனோஜ் ரொம்ப பிடிக்கும். நாங்கள் மலேசியாவில் தான் இருந்தோம். எனக்கு சின்ன வயதிலேயே என்னுடைய அப்பா ரொம்ப குடிப்பார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் என்னுடைய அம்மாவை அடித்து துரத்தி விட்டார்.

சின்ன வயதிலேயே என் அம்மா வேதனையிலேயே இறந்து விட்டார். அதற்கு பிறகு கஷ்டப்பட்டு படித்து நான் ஒரு பார்லர் தொடங்கினேன். மனோஜை பார்த்தவுடன் பிடித்தது. அப்போது தான் அத்தை பணக்கார பெண்ணை தேடுகிற விஷயம் தெரிந்துதான் நான் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னவுடன் விஜயா, இன்னும் என்னென்ன பொய் சொல்கிறாய் என்று அதிகமாக கோபப்பட்டார். உடனே அண்ணாமலை, இது மட்டும் தானா, வேற ஏதாவது மறைக்கிறாயா? எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லிவிடு. இந்த குடும்பத்திற்கு உண்மையாக இரு என்று சொன்னார். அதற்கு ரோகினி, அவ்வளவுதான் என்று தான் திருமணம் செய்த விஷயத்தை மறைத்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் பாட்டி, இனிமேல் நீ இந்த வீட்டிற்கு உண்மையாகவும், மனோஜிற்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். சத்தியம் செய் என்று சொன்னார். ஒரு நிமிடம் ரோகினி அமைதியாக இருந்தார். உடனே அண்ணாமலை, வேறு ஏதாவது சொல்லனுமா? என்று கேட்டதற்கு ரோகினி, எதுவும் இல்லை. நான் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். நான் இந்த குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்தார். இதையெல்லாம் பார்த்து விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ரோகினி, முத்து-மீனா இருவரையும் முறைத்துக் கொண்டே ரூமிற்கு சென்றார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் பாட்டி, விஜயா மீதும் தவறிருக்கிறது. மருமகள்களை சமமாக நடத்து என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் ரூமில் ரோகினி, மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மனோஜ், நீ சொல்வதில் எது உண்மை என்று நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு நீ பொய் சொல்கிறாய். உன் மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை என்று பேசி இருந்தார். ரோகினி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே மனோஜ் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் மாடியில் சுருதி, முத்து, மீனா, ரவி எல்லோரும் ரோகினி பஞ்சாயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் மனோஜ் கேட்டு வேதனைப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்து கூப்பிடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். அப்போது முத்து, மீனா, ஸ்ருதி மூவருமே விஜயாவை கிண்டல் அடித்து கேலியாக பேசுகிறார்கள். இதனால் கோபமடைந்த விஜயா கத்துகிறார். ஆனால், கடைசியில் அது விஜயா கண்ட கனவு. இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான் என்று அவரை முறைத்துக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் பாட்டி, நான் ஊருக்கு கிளம்புகிறேன். சண்டை போடாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். நடந்ததை மறந்து விடுங்கள். சீக்கிரத்தில் குழந்தையை குழந்தையை பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மனோஜ்- ரோகினி இருவரும் வேலைக்கு கிளம்புகிறார்கள். அப்போது மனோஜிடம் விஜயா, நீ இனிமேல் ரோகினி இடம் பேசக்கூடாது. அவள் தனியாகவே போகட்டும். அவள் ஷோ ரூமுக்கு போகக்கூடாது என்று நிறைய கண்டிஷன் போடுகிறார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. ரோகினி, எனக்கு தான் ஆடிட்டிங் தெரியும் என்று சொன்னவுடன் இன்னும் கோபப்பட்ட விஜயா, என் மகனை ஏமாத்தாதே. அவன் பார்த்துக் கொள்ளுவான். உன் வேலையை செய் என்று மிரட்டி அனுப்புகிறார். வேதனையில் உள்ளே சென்று ரோகினி அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்து அவருடைய அம்மா, என்னுடைய பிறந்தநாளை மறந்து விட்டாயா? என்று பேசுகிறார். பின் ரோகினி தன்னுடைய அம்மாவையும் மகனையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full