ரோகினிக்கு விஜயா போட்ட கண்டிஷன், சீதாவின் காதல் முத்துவிற்கு தெரிந்ததா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஷோரூமில் மனோஜ் ரோகினியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருமே மனோஜுக்காக ரோகினி செய்த வேலையை பற்றி சொல்லி கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு இரண்டு பேரை அழைத்து வந்தார். அவர்கள் காரிலேயே குடிப்பதால் முத்துவிற்கு கோபம் வந்து அவர்களை அடித்தார். உடனே அவர்கள், நாங்கள் சிட்டி ஆட்கள் என்று சொன்னார்கள். உடனே முத்து, அவர்களை சிட்டி இடத்திற்கு அழைத்து வந்து வெளுத்து வாங்கி இருந்தார். அந்த இடத்தில் மீனாவின் தம்பி சத்யாவும் இருந்தார்.
சத்யா, நான் காலேஜுக்கு போகும்போது என்னை வழி மறைத்து அழைத்து வந்து விட்டார்கள் என்று சொன்னார். அப்போது சிட்டி, நீ எப்படி தேர்வு எழுதி விடுகிறாய்? என்று பார்க்கிறேன் என்று சொன்னவுடன் முத்து, என்னை மீறி நீ அவன் மீது கையை வைத்து பார் என்று சவால் விட்டார். இன்னொரு பக்கம் வித்யாவிற்கு முருகன் தன்னுடைய காதலை சொல்ல, வித்யாவும் காதலை ஏற்றுக் கொண்டார். அதற்குப்பின் ரோகினி, கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த சுருதி, பொய் சொன்னீர்கள் என்றவுடன் உங்களை சமைக்க சொல்லி விட்டார்களா? என்று நக்கலாக வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ஸ்ருதி, முத்து- மீனா கண்ணுக்கு மட்டும் மலேசியா மாமா படவில்லை என்றால் நீங்கள் மாட்டி இருக்க மாட்டீங்க. உங்களுடைய எல்லா விஷயத்திலும் உண்மையை முத்து தான் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்ல சொல்ல, ரோகினிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது. ஆனால், அவர் அமைதியாகவே இருந்தார். ஸ்ருதி விடாமல் ரோகினியை கிண்டல் செய்து கொண்டிருந்தார். இதை கேட்டு மீனாவும் சிரித்துக் கொண்டிருந்தார். பின் ரோகினி எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டார். இதை பார்த்த ஸ்ருதி, முத்து சொன்னது போல் இவர்களிடம் இன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறது என்றார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மனோஜ் மாடியில் தூங்கப் போனார். உடனே விஜயா, அந்த மேடம் கீழே படுக்கட்டும். நீ பெட்டில் படு என்று சொன்னார். இதை கேட்டு ரோகினி ரொம்ப வேதனைப்பட்டார். மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக தூங்கி இருந்தார் இதைப் பார்த்து முத்து- மீனா இருவரும் ரோகினி நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி- ரவி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுருதி, எனக்கு தெரிந்தவருக்கு மேக்கப் போட வேண்டும். ரோகிணிக்கு அந்த ஆர்டர் கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் ரவி, அம்மா ஏதாவது திட்ட போகிறார்கள் என்று சொன்னார். ஸ்ருதி, எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அது அவர்களுடைய தொழில் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினியிடம் ஸ்ருதி, எனக்கு தெரிந்தவருக்கு மேக்கப் செய்துவிட வேண்டும். நீங்கள் செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு அவர் விஜயாவை பார்க்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா என்ன சொல்வார்? என்று தான் எதிர்பார்க்கிறார்கள். உடனே அண்ணாமலை, நீ ரோகினி வேலைக்கு போகக்கூடாது என்று சொன்னாயா? எதற்கு இந்த பிரச்சினை? எல்லாத்தையும் மறந்து விடு என்று சொல்கிறார். ஆனால், விஜயா எதுவும் பேசாமல் கோபத்திலேயே இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
ரோகினி குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் நான் அத்தை சொல்வது தான் கேட்பேன் என்று சொல்கிறார். கடைசியில் விஜயா, ரோகினி ஷோரூம் போகக்கூடாது, பார்லர் வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சீதா. அருணின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு அருணின் அம்மா அவருடைய கல்யாணத்தை பற்றி பேசினார். அதற்கு பின் சீதாவை வீட்டிற்கு அருண் அழைத்து வருகிறார். வீட்டில் விடாமல் வேறு ஒரு இடத்தில் நிற்க சொல்கிறார் சீதா. அந்த இடத்தில் தான் முத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இது தெரியாமல் சீதா- அருண் இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் அருண் கிளம்பும்போது முத்து பார்த்து விடுகிறார். பின் சீதாவிடம் இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்பதற்கு பிரண்ட் வீட்டில் விட வந்தார் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.