ரோகினியுடன் சேர்ந்து வாழ நினைக்கும் மனோஜ், விஜயாவின் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

மனோஜை வெளுத்து வாங்கும் விஜயா

By subhashini · 6/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா வரும் வழியில் சிந்தாமணி ஆட்கள் பணத்தை திருடுவதற்கு திருடினார்கள். ஆனால், உண்மையில் பணம் இல்லை. முத்து சொன்னது போல் மீனா நடந்தார். அதற்குப்பின் பணத்தை வாங்குவதற்காக முத்து பைனான்சியர் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் பணம் எடுத்து வருபவர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் என்றார். பின் முத்து, டாக்குமெண்டில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு அந்த பணம் வைத்திருப்பவர் இடத்தை சொல்லுங்கள். நானே நேரில் சென்று வாங்கிக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் ஏலத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 52 லட்சம் வரை சிந்தாமணி வீட்டை கேட்டிருந்தார். யாருமே கேட்காததால் ஏலத்தில் விடப் போனார்கள். மீனா அதிர்ச்சியில் இருந்தார்.

சிந்தாமணி, முத்து வீட்டை எப்படியாவது அடைய வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை எல்லாம் செய்தார். இருந்தாலும் முத்து-மீனா இருவரும் அதை முறியடித்து விட்டார்கள். கடைசியாக பணத்தைக் கட்டி வீட்டை முத்து-மீனா இருவரும் மீட்டு விட்டார்கள். வக்கிலுமே வீட்டை மீட்டு முத்துவிடம் கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிந்தாமணி கோபத்தில் அங்கிருந்து கிளம்பினார். மீண்டும் அண்ணாமலையின் குடும்பம் வீட்டிற்கு வந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

தன்னுடைய வீட்டை பார்த்தவுடன் விஜயா எமோஷனலாக அழுதார். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்ததால் வீட்டில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முத்து. தங்களுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லோரையுமே அழைத்து இருந்தார்கள். எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு கோபம் தான் வருகிறது. பார்வதி, மூத்த மகனால் தான் இந்த வீடு போக இருந்தது. ஆனால், முத்து இந்த வீட்டை உனக்காக மீட்டு கொடுத்து விட்டான். முத்துவிற்கு உன் மேல் ரொம்பவே பாசம் என்றார். அதை கேட்டு விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நல்லபடியாக தங்களுடைய வீட்டில் பூஜையை செய்கிறார்கள். அப்போது அண்ணாமலை, முத்து-மீனாவை பூஜையில் உட்கார சொல்கிறார். விஜயாவும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் சந்தோஷமாக முத்து-மீனா இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு பூஜையில் உட்கார்ந்தார்கள். மொத்த வீடுமே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், மனோஜ் மட்டும் வேதனையில் இருக்கிறார். அதற்குப்பின் விஜயா மனோஜிடம் நலம் விசாரிக்கிறார் அப்போது மனோஜ் ரோகிணியை பற்றி ரொம்ப பெருமையாகவும் அவருடன் சேர்ந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதை பற்றி எல்லாம் பேசுகிறார். இதனால் கொந்தளித்த விஜயா, ரோகினிக்கு போன் செய்து கண்டமேனிக்கு மோசமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

ரோகிணியும் விஜயா பேசுவதை தாங்க முடியாமல் கோபப்படுகிறார். ஒரு கட்டத்தில் விஜயா, ரோகினியை திட்டி போனை வைத்துவிட்டு மனோஜ்க்கு வார்னிங் கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரோகிணியுடன் சேர்ந்து எங்கும் போகக்கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் விஜயா கண்டிஷன் போடுகிறார். மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ரேகாவிடம் பேச முடியாததால் சத்யா கவலையில் இருக்கிறார். மீனா, இந்த காதல் தேவை இல்லை. தயவு செய்து உன்னுடைய வேலையை பார் என்று சொல்கிறார். மீனாவின் அம்மாவும் சத்யாவை திட்டி அறிவுரை சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full