உண்மை அறிந்து சிந்தாமணியை வெளுத்து வாங்கும் விஜயா, அடுத்து என்ன? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 18/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அம்மா, விஜயாவிற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார். தங்கும் இடத்திலிருந்து சாப்பாடு வரை என எல்லாமே புதிதாக வாங்கி கொண்டு வந்து செய்தார். இருந்தாலுமே விஜயா குறை சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மனோஜை சந்திக்க வந்த ரோகினி, விஜயாவை பற்றி விசாரித்தார். மனோஜ் நடந்தது எல்லாம் சொன்னார். ரோகினி, நாம் எப்படியாவது சேர வேண்டும். இந்த வீட்டு பிரச்சினை முடிய வேண்டுமென்றால் தயவு செய்து வீட்டை விற்று விடுங்கள். நல்ல ரேட்டுக்கு போகிறது என்றார்.

மனோஜ், நான் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால், வீட்டில் யாரும் கேட்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து மனோஜின் வக்கீல் வந்து விட்டார். அவர் ரோகினி- மனோஜ் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து கோபப்பட்டார். பின் இதைப் பற்றி வக்கீல் போன் செய்து விஜயாவிடம் சொன்னார். விஜயா ஷாக் ஆனார். அதற்குப்பின் முத்துவின் நண்பர் அதிகாரி, பைனான்சியர் வீட்டிற்கு போகலாம் என்று அழைத்தார். முத்துவும் தன்னுடைய தந்தையிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அங்கிருந்து சந்தோசமாக கிளம்பினார்.

சிறகடிக்க ஆசை:

முத்து- மீனா இருவரும் தன்னுடைய நண்பர் வருமான வரித்துறை அதிகாரியை அழைத்துக் கொண்டு பைனான்சியர் ஆபீஸ்க்கு போகிறார்கள். அங்கு அதிகாரி நண்பர், பைனான்சியரை சந்தித்து முத்துவின் வீட்டை அபகரித்த விஷயத்தை பற்றி விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் பைனான்ஸ் உண்மையை எல்லாம் சொல்லிவிடுகிறார். அப்போ அவர், நான் சிந்தாமணி சொல்லித்தான் செய்தேன். பத்திரம் அவரிடம் தான் இருக்கிறது. அவர்தான் வட்டி மேல் வட்டி அதிகமாக போட சொல்லி வீட்டிற்கு சீல் வைக்க சொன்னார் என்று எல்லாத்தையும் சொல்லி விடுகிறார். இதை கேட்டு முத்து-மீனா இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் செய்து முத்துவின் வீட்டு பத்திரத்தை கொடுக்க சொல்லி கேட்கிறார். சிந்தாமணி, டாக்குமெண்ட் எல்லாம் கரெக்டா இருக்கிறது. என்னுடைய பணத்தை கொடுக்கும் வரை நான் வீட்டை தரமாட்டேன் என்று மிரட்டுகிறார். இதை கேட்ட அதிகாரி, சட்டப்படி தான் கொண்டு செல்ல முடியும். தைரியமாக இருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, எதற்காக ரோகினி கடைக்கு வந்தாள்? என்று கேட்கிறார். மனோஜ், கடையில் அதிகமாக எலி இருப்பதால் அதை பிடிக்க பூனை கொண்டு வந்தார் என்று சமாளிக்கிறார். இருந்தாலும் விஜயா, ரோகிணி கடைப்பக்கம் வரக்கூடாது. உனக்கு விவாகரத்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். ஜீவா, கடையில் cctv இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே மனோஜ் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

https://www.youtube.com/watch?v=8avlWKtrMwg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையின் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்துவின் வீட்டை அபகரிக்க முழுக்க முழுக்க முழுக்க திட்டம் போடுவது சிந்தாமணி தான் என்ற உண்மையை முத்து-மீனா கண்டுபிடித்து விடுகிறார்கள்.
இதை அறிந்த விஜயா, சிந்தாமணியிடம் சண்டை போடுகிறார். சிந்தாமணி எதுவுமே தெரியாது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜயா, இது எல்லாம் உன் மகளுக்கு தானே சேர்த்து வைக்கிறார். ஒன்னும் இல்லாதவனை நம்பி அவள் ஓடிப் போகப் போகிறாள் என்று சாபமெல்லாம் விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full