ரோகினியின் திட்டத்தால் கிரிஷ் செய்த வேலை, விஜயா பேச்சை மீறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, என்ன சொல்கிறார்கள் என்று கூட கேட்கவில்லை. வழக்கம் போல வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார். மீனா, முத்து தரப்பு பற்றி சொல்லியுமே சீதா கேட்கவில்லை. கோபத்தில் சீதா, இந்த உறவு எங்களுக்கு தேவையில்லை. இனிமேல் நான் முத்து-மீனாவிடம் பேசப்போவதில்லை. யாரும் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள தெரியும் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு மீனா கோபப்பட்டு திட்ட, முத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
க்ரிஷ் படித்து நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதால் சர்டிபிகேட் வாங்குவதற்காக பள்ளியில் பெற்றோர்களை வர சொன்னார்கள். க்ரிஷ், மனோஜ்க்கு போன் செய்து பள்ளிக்கு வர சொன்னார். ரோகினி, நீதான் இந்த வீட்டில் படித்தவர் என்பதால் கிரிஷ் உன்னை சூஸ் பண்ணி இருக்கிறான். நீயே போய் சர்டிபிகேட் வாங்கு என்று சொல்வதால் மனோஜ் ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் உண்மை அறியாமல் முத்து-மீனா இருவரும் க்ரிஷ் பள்ளிக்கு வந்தார்கள். பின் முத்து- மனோஜ் இடையே வாக்குவாதம் நடந்தது. பின் மீனா சொன்னதால் முத்து அமைதியாகி விட்டார். மனோஜ்-ரோகிணி இருவரும் சென்று கிரிஷுக்கு சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டும் மனோஜ்- ரோகிணி இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விஜயா, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடினார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை, கிரிஷ்க்கு பிடித்திருப்பதால் தான் மனோஜிடம் செல்ல விரும்பினார். இது எல்லாம் நீ தடுக்கக்கூடாது என்றெல்லாம் திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து ரவி வந்து விட்டார். பின் ரவி, தான் வெற்றி பெற்றதை சொல்லி வீட்டில் எல்லோருக்கும் வாங்கி வந்த கிபிட் கொடுத்தார். ரூமில் ரவி தான் எடுத்து வந்த துணிகள் எல்லாம் அடுக்கி வைத்தார். அப்போது நீத்து துணியை பார்த்து சுருதி கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, நீத்து துணி இருந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரவியிடம் சண்டை போடாமல் அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ் செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார். பின் தன்னுடைய உடம்பில் கல்யாணி ஆவி வந்தது போல ரோகிணி நடித்துக் கொண்டு கிரிஷ்க்கு நீதான் அப்பா, ரோகிணி தான் அம்மா என்றெல்லாம் சொல்வதால் மனோஜ் ஒத்துக்கொள்கிறார். பின் ரோகினி சொன்னது போல் கிரிஷ், மனோஜை பார்த்து அப்பா என்று கூப்பிடுகிறார். வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். உடனே அண்ணாமலை, யார் உன்னை அப்படி சொல்ல சொன்னது என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு கிரிஸ், ரோகிணி தான் என்று சொல்கிறார். ரோகினி, நான் எதுவும் சொல்லவில்லை என்றுகிறார். இது கல்யாணி ஆவி செய்த வேலை தான் என்று புரிந்து கொண்ட மனோஜ், அவனுக்கு யாரும் இல்லை. அதனால் அவன் எங்களை அப்பா அம்மா என்று அழைக்கிறார். கூப்பிட்டு கொள்ளட்டும் என்று சொல்கிறார். உடனே விஜயா, அதெல்லாம் முடியாது என்று மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் மனோஜ், தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்கவில்லை. அதற்கு பின் மீனா, ரோகிணி இருவரும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். மீனா, சீக்கிரமாக வீட்டில் உண்மையை சொல். உன் வாழ்க்கையில் நடந்த சில தவறுக்காக தான் நானும் அமைதியாக இருக்கிறேன். உண்மையை சொல்லாமல் எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவாய்? என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது