வசமாக சிக்கிக்கொண்ட ரோகினி, வெளுத்து வாங்கும் விஜயா - அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 18/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், உன் மூத்த மருமகளால் தான் உன்னுடைய உயிர் காப்பாற்றப்படும். மகனையும் மருமகளையும் பிரித்து வைக்காதே என்று ஏதேதோ கதை அடித்து விட்டார். இன்னொரு பக்கம் முத்து, சீதாவிற்காக ஒரு மாப்பிள்ளையை அழைத்து வந்தார் ஆனால், அவர் டிரைவர் என்று தெரிந்தவுடன் மீனா வேண்டாம் என்றார். அதற்கு முத்து, சரி இந்த மாப்பிள்ளை வேண்டாம். ஆனால், அருணை மட்டும் நான் சீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னார். மீனாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பின் சாமியின் சம்மதத்தை கேட்கலாம் என்று சீட்டில் எழுதி போட்டார்.

மீனா, சீட்டு குலுக்கி போட்டார். அதை சீதா தான் எடுத்தார். அதில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். இதனால் மீனா, கடவுளுடைய விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ அருணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள். நான் உன் மாமாவை சமாளித்துக் கொள்கிறேன் என்றார். அதனால் சீதா ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் இதைப்பற்றி சீதா, அருண் இடம் போன் செய்து சொன்னார். அதற்குப்பின் அருணை சந்தித்த மீனா கோபப்பட்டு பேசி இருந்தார். இந்த விஷயத்தில் என் புருஷனை ஜெயித்ததாக நினைக்காதீர்கள். சீதா அப்பா இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால் அதற்காக தான் இதற்கு நான் ஓற்றுக் கொண்டேன் என்றார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு இன்னொரு பக்கம் முத்து, ராமா குரூப்பில் இருந்த நபர் காசு தரவில்லை. அதனால முத்து, எமதர்மராஜா வேடமணிந்து வீட்டிற்கு வந்தார். முத்துவை பார்த்தவுடன் விஜயா பயப்பட்டார். ஏற்கனவே ஜோசியர், உன் வீட்டிற்கு எமதர்மன் வருவார் என்று சொல்லி இருந்தார். அதை நினைத்து பார்த்து உண்மையாலுமே எமதர்மன் வந்து விட்டானோ என்று கதறுகிறார் விஜயா. முத்து இது தான் சந்தர்ப்பம் என்று தன்னுடைய அம்மாவை ரொம்பவே பயமுறுத்துகிறார். அப்போது வந்தா அண்ணாமலை, என்னடா வேஷம் முத்து என்று கேட்க, விஜயா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

மேலும், இன்றைய எபிசோட்டில் முத்து தான் எமதர்மராஜா வேடத்தில் வந்தது என்று தெரிந்ததுமே விஜயா திட்டுகிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இந்த வேஷம்? ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்கிறார்கள். அப்போது டிராமா குரூப்பில் இருந்த நபர், சீக்கிரம் வேசத்தை கழட்டுங்கள். எனக்கு நேரம் ஆகிறது என்று சொன்னவுடன் முத்துவும் அதை எடுத்து கொடுக்கிறார். விஜயா ரொம்பவே பயந்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார்.
அதற்குப்பின் முத்து தான் போட்ட எமதர்மராஜா வேடத்தை பற்றி மீனாவிடம் பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் விஜயா தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய கனவில், விஜயா இறந்து விடுகிறார். அண்ணாமலைக்கு வீட்டில் உள்ள எல்லோருமே கட்டாயப்படுத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் தூக்கத்திலேயே விஜயா வேண்டாம், வேண்டாம் என்று கத்துகிறார். உடனே அண்ணாமலை, விஜயாவை எழுப்பி எதற்கு கத்துகிறாய்? அமைதியாக தூங்கு என்று திட்டுகிறார். அப்போதான் அது கனவு என்று புரிந்து விஜயா பெருமூச்சு விடுகிறார். மறுநாள் காலையில் சாமியார் சொன்னது போல் விஜயா சிவப்பு புடவை கட்டியிருக்கிறார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு கீரை விற்றுக்கும் பெண்ணுடன் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். கனவில் அண்ணாமலை திருமணம் செய்த பின் அவர்தான் என்பதால் விஜயா ஷாக் ஆகிறார்.

https://www.youtube.com/watch?v=vNY8VF0CoE0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜயா- பார்வதி இருவருமே சிந்தாமணியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு போகிறார்கள். அங்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். அப்போது பார்ட்டிக்கு வந்த சிந்தாமணியின் தோழி, விஜயாவின் கழுத்தில் போட்டு இருந்த செயினை பார்த்து, இது என்னுடைய திருட்டுப் போன செயின் என்று சொல்கிறார். உடனே விஜயா, இது என்னுடைய கோடீஸ்வரி மருமகள் வாங்கித் தந்தது என்று சொல்கிறார். பின் சிந்தாமணியின் தோழி, அந்த செயினை பிடுங்கி அதில் இருக்கும் தன்னுடைய பெயரை காண்பிக்கிறார். இதனால் விஜயாவுக்கு அசிங்கமாக போகிறது. பின் வீட்டிற்கு வந்த விஜயா, ரோகினியை வெளுத்து வாங்கி வீட்டில் உள்ள எல்லோரிடமும் ரோகினி செய்த வேலையை சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full