மீனா வீட்டிற்கு அழைக்கும் அண்ணாமலை, விஜயா எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தைரியமாக இரு என்றார். இன்னொரு பக்கம் சுருதியின் அம்மா சுதாவின் வீட்டிற்கு அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே குடித்துக்கொண்டு ஆட்டம் பாட்டம் என்றார்கள். இதை பார்த்து விஜயாவுக்கு பிடிக்கவே இல்லை. சுதா, விஜயாவை நடனமாட சொல்லி கேட்டார். சுதாவின் நண்பர்களுமே கட்டாயப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் கொந்தளித்த விஜயா, குடிகாரர்களுக்கு மத்தியில் நான் என்ன நடனமாடுபவளா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். பின் விஜயா, மனோஜ் ஷோரூமில் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து சென்று விட்டார்.
ரோகிணி, விஜயாவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார். ஸ்ருதி- ரவி இருவருமே விஜயாவை பற்றி கேட்டார்கள். அதற்கு சுதா, யாரிடமும் சொல்லவில்லை கிளம்பிவிட்டார் என்றார். பின் ஸ்ருதி கேள்வி மேல் கேள்வி கேட்டதால் வீட்டில் நடந்ததை எல்லாம் சுதா சொன்னார். இதைக் கேட்டு ஸ்ருதி ரொம்பவே கோபப்பட்டார். ரவி, தன் அம்மாவை நினைத்து ரொம்பவே வேதனைப்பட்டார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவரும் விஜயாவை தேடி போனார்கள். இன்னொரு பக்கம் இங்கிலீஷ் இன்ஸ்டிடியூட்டில் முத்து- மீனா இருவரும் இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அங்கு நடத்தும் பாடங்களை எல்லாம் கவனமாக கவனித்தும், கேள்விகளுக்கு பதில் சொல்லியும் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சுருதி- ரவி இருவருமே அங்கு வந்தார்கள். உடனே முத்து-மீனா இருவரும் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது சுருதி, தன்னுடைய வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி விஜயா காணவில்லை என்றார். மீனா, ரொம்பவே பதறுகிறார். முத்து, நாங்கள் கண்டுபிடிக்கிறோம். தைரியமாக இரு என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மனோஜ், தன் அம்மாவிற்காக சமைத்து கொடுத்தார். விஜயா ரொம்பவே வேதனையில் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து- மீனா இருவரும் விஜயா இருக்கும் இடத்தை அறிந்து வருகிறார்கள்.
மனோஜ், ஷோரூமில் வசதி இல்லை. இருந்தாலும் விஜயா அங்கேயே இருக்கிறார். முத்துவை பார்த்தவுடன் விஜயாவிற்கு கோபம் வருகிறது. பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். மீனா தன்னுடைய வீட்டில் வந்து தங்குமாறு கெஞ்சி கேட்கிறார். விஜயா அதெல்லாம் முடியாது என்று ரொம்ப நக்கலாக பேசுகிறார். அதற்குப்பின் வீட்டுக்கு போன முத்து-மீனா இருவரும் விஜயா சொன்னதை சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, அது அவளுடைய விதி என்று சொல்லி அமைதியாகி விடுகிறார். அதற்கு பின் விஜயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மனோஜ் தனக்கு தெரிந்ததை செய்து கொண்டிருக்கிறார். அதோடு விஜயா கடையில் இருப்பதால் இரண்டு நாட்களாகவே ஷோரூமை திறக்கவே இல்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை பார்த்தவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் அண்ணாமலை, இந்த நிலைமை தேவையா? என்று கூப்பிடுகிறார். அப்போது முத்து-மீனா இருவரும் அங்கு வந்து விடுகிறார்கள். மீனா, உங்களுக்கு எந்த வசதியும் குறைவில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செய்து வாருங்கள் என்று கூப்பிடுகிறார். விஜயா அமைதியாகவே இருக்கிறார்.