விஜயா எடுத்த முடிவால் ஆடிப்போன மொத்த குடும்பம், ரோகினி என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

By subhashini · 15/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி சென்ற பிறகு சிந்தாமணி, இவளை வைத்து தான் நான் அந்த வீட்டை எழுதி வாங்கணும். இவள் எனக்கு ஒரு பகடைக்காய் என்று ஒரு புது திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் மீனாவின் உடல் நிலை அறிந்து அண்ணாமலை வீட்டிற்கு வந்துவிட்டார். பின் அண்ணாமலை, மீனா- முத்துவிற்கு அறிவுரை சொல்லி சாப்பிட சொன்னார். பின் முத்து கொஞ்சம் சமாதானமாகி மீனாவை சாப்பிட சொன்னார்.

பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, உன்னால் தான் என் மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது. நீதான் இந்த பிரச்சனை சரி செய்யணும் என்று சண்டை போட்டார். பார்வதி, நான் ரோகினி அறிமுகம் தான் செய்து வைத்தேன். ஆனால், உன் பேராசை தான் இந்த பிரச்சனை நடந்தது. நான் என்ன செய்ய முடியும் என்று சொன்னார். உடனே கோவப்பட்ட விஜயா, பார்வதியை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் வீட்டில் மனோஜ் ரொம்ப சோகமாகவே இருந்தார். அதற்கு விஜயா, சீக்கிரமாகவே மனோஜின் வாழ்க்கையை விட்டு ரோகினியை வெளியே அனுப்பனும். இருவருக்கும் விவாகரத்து வாங்கி தரணும் என்றார்.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை, உன்னுடைய அவசர புத்தியால்தான் மனோஜின் வாழ்க்கை இப்படி நடந்தது.
எதுவாக இருந்தாலும் நிதானமாக செய்யணும். அமைதியாக இரு என்றார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலையின் குடும்பத்தை ரொம்ப மோசமாக
பேசி இருந்தார். கோபத்தில் அண்ணாமலை சண்டை போட்டார். பின் முருகன்-வித்யா இருவரும் மீனாவை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அப்போது முத்து, வித்யா- மீனா செய்த வேலையை பற்றி திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வித்யா, மீனா மீது எந்த தவறும் இல்லை. கிரிஷ்க்காக தான் அவர் அப்படி செய்தார் என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை.
முத்து, மீனாவின் மீது கோபத்தில் தான் இருக்கிறார். தன்னுடைய அப்பா சொன்னதால் தான் மீனாவை பார்க்க முத்து வருகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, தன்னுடைய இன்னொரு வீட்டில் ரோகினியை தங்க வைக்கிறார். பின் சிந்தாமணி, விஜயாவின் மனதில் என்ன இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடக்க வேண்டும்.

சீரியல் ட்ராக்:

நீ முத்து வீட்டிற்கு வா. அவர்கள் உன்னிடம் பேசுவதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் மீனாவை வீட்டிற்கு முத்து அழைத்து வருகிறார். அப்போது விஜயா, நீ வந்த நேரம் தான் வீட்டில் இவ்வளவு பிரச்சினை. உன் ராசி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். ஆனால், முத்து இந்த முறை மீனாவிற்கு சப்போர்ட் செய்து எதுவுமே பேசவில்லை. அண்ணாமலை, நீ விசாரிக்காமல் செய்த தவறுக்காக மீனா மீது பழி போடாதே என்று சொல்கிறார். உடனே விஜயா, நான் ரோகினிக்கு விவாகரத்து செய்து மனோஜிற்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பம் ஷாக் ஆகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full