மனோஜுக்கு பைனான்சியர் வைத்த செக், விஜயா எடுத்த விபரீத முடிவு - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 19/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, உன்னுடைய அவசர புத்தியால்தான் மனோஜின் வாழ்க்கை இப்படி நடந்தது. எதுவாக இருந்தாலும் நிதானமாக செய்யணும். அமைதியாக இரு என்றார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலையின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார். கோபத்தில் அண்ணாமலை சண்டை போட்டார். பின் முருகன்-வித்யா இருவரும் மீனாவை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அப்போது முத்து, வித்யா- மீனா செய்த வேலையை பற்றி திட்டிக் கொண்டிருந்தார்.

வித்யா, மீனா மீது எந்த தவறும் இல்லை. கிரிஷ்க்காக தான் அவர் அப்படி செய்தார் என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை. முத்து, மீனாவின் மீது கோபத்தில் தான் இருந்தார். தன்னுடைய அப்பா சொன்னதால் தான் மீனாவை பார்க்க முத்து வந்தார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, தன்னுடைய இன்னொரு வீட்டில் ரோகினியை தங்க வைத்தார். பின் சிந்தாமணி, விஜயாவின் மனதில் என்ன இருப்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடக்க வேண்டும். நீ முத்து வீட்டிற்கு வா. அவர்கள் உன்னிடம் பேசுவதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்றார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மீனாவை வீட்டிற்கு முத்து அழைத்து வந்தார். அப்போது விஜயா, நீ வந்த நேரம் தான் வீட்டில் இவ்வளவு பிரச்சினை. உன் ராசி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். ஆனால், முத்து இந்த முறை மீனாவிற்கு சப்போர்ட் செய்து எதுவுமே பேசவில்லை. அண்ணாமலை, நீ விசாரிக்காமல் செய்த தவறுக்காக மீனா மீது பழி போடாதே என்றார். உடனே விஜயா, நான் ரோகினிக்கு விவாகரத்து செய்து மனோஜிற்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். இதை கேட்டு மொத்த குடும்பம் ஷாக் ஆனது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, கோபத்தில் சுருதி- மீனாவை மிரட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் முத்து பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார். அண்ணாமலை, முத்து உண்மை சொல்ல தயங்குகிறார்கள். ஆனால், அதற்குள் விஜயாவே போன் செய்து எல்லா உண்மையும் சொல்லி இருப்பது தெரிய வருகிறது. பாட்டி, வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதற்குப்பின்
முத்து அல்வா செய்து எல்லோருக்கும் கொடுக்கிறார். அதை வாயில் வைக்க முடியவில்லை, ரொம்ப மோசமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

அதுக்குப்பின் விஜயா, ரோகினி சம்மந்தப்பட்ட போட்டோவை எல்லாம் எடுத்து மனோஜிடம் சொல்லி எரிக்க சொல்கிறார். அந்த சமயம் பார்த்து பைனான்சியர் வீட்டிற்கு வருகிறார். அப்போது வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார். அப்போது பைனான்சியர், மனோஜ் ஒன்னுத்துக்கும் லாகில்லாதவன். நான் ரோகினியை நம்பி தான் பணத்தை இருந்தேன். இனிமேல் மனோஜ் பணத்திற்கு யார் கேரன்டி கொடுப்பது என்று கேட்கிறார். கோபத்தில் விஜயா, மனோஜ் பணம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
வீட்டில் எல்லோரும் தடுத்தும் விஜயா கேட்கவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full