ரோகினியிடம் பணத்தை கேட்டு மிரட்டும் விஜயா, முத்து போட்ட மாஸ்டர் பிளான் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 7/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் விஜயா, நீங்கள் அந்த 27 லட்சம் பணத்தை கொடுத்து விட்டால் முத்துவின் ஆட்டத்தை அடக்கிவிடலாம். நீ எப்படியாவது உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்தை வாங்கி கொடு என்று ஆர்டர் போட, அதிர்ச்சியில் ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் ஷோரூம் போவதற்கு முத்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார். நேற்று எபிசோடில் ஷோரூமிற்கு முத்து குடும்பமே போயிருந்தது. எல்லோரையும் பார்த்து மனோஜ்- ரோகினி
ஷாக் ஆனார்கள். அதன் பின் முத்து, தன்னுடைய அப்பாவுக்கு மாலை அணிவித்து ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்பட்டார்.

அதோடு இவர் தான் இனி கடையின் ஓனர் என்று சொன்னவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மனோஜ், ரோகினியால் எதுவும் பேசவே முடியவில்லை. அந்த சமயம் பார்த்து டீலர் ஓனர் சந்தோஷி அங்கு வந்தார். அவரை பார்த்தவுடன் ஏதோ சொல்லி அண்ணாமலை சமாளித்து விட்டார். அப்போது மனோஜிடம் அட்வான்ஸ் கொடுத்த சப் டீலர்ஸ்கள் வந்தார்கள். அவர்கள் பணத்தை திருப்பி கேட்டவுடன் மனோஜ் ஏதேதோ காரணத்தை சொல்லி இருந்தார். உடனே சந்தோஷி, பொருள் தாமதம் ஆகிறது வந்து விடும் என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு மனோஜை பயங்கரமாக திட்டி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அப்போது அண்ணாமலை, பங்களா வாங்க மனோஜ் செய்த வேலையை சொன்னவுடன் அவருக்கு கோபம் அதிகமானது. உடனே அவர், மனோஜை திட்டிவிட்டு இனிமேலாவது புத்தியாக நடந்து கொள். உன் அப்பா, தம்பிக்காக தான் இந்த டீலங்கை ஒத்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விட்டார். பின் வீட்டில் முத்து வந்தவுடன் விஜயா தாண்டவம் ஆடி இருந்தார். மனோஜ்-ரோகினி இருவருமே முத்துவிடம் சண்டைக்கு போனார்கள். கோபத்தில் மீனா, ஆரம்பித்து வைத்ததெல்லாம் உங்கள் கணவர் தான். அவர் சரியாக இருந்தால் இவ்வளவு பிரச்சினையே கிடையாது என்று சொன்னவுடன் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டார்கள்.

நேற்று எபிசோட்:

கடைசியில் அண்ணாமலை எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார். பின் விஜயா, நீ எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்துவிடு. இந்த பிரச்சனை முடிந்து விடும் என்று ரோகினியை மிரட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கதிரை கண்டுபிடிக்க திட்டம் போட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மனோஜ், பங்களா வாங்க ஆசைப்பட்டது நீயும் தான் என்று செல்ல, என்னால் தான் எல்லா பிரச்சனையும் வந்தது. உங்களால் எதுவுமே இல்லை என்று ரோகினி கோபப்படுகிறார். பின் எப்படியாவது அந்த கதிரை கண்டுபிடித்து பணம் வாங்கணும் என்று ரோகினி சொல்ல, உன் அப்பாவிடம் பேசி பணத்தை வாங்கு என்று சொல்லுடன் ரோகிணிக்கு பயங்கர கோபம் வந்து கத்துகிறார்.

இன்றைய எபிசோட்:

மறுநாள் காலையில் சிந்தாமணி நடிகரின் வீட்டில் ஆர்டர் வாங்கப் போகிறார். அந்த சமயம் வந்த மீனா, பூ தினமும் போடுவதாக அந்த நடிகரிடம் சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து சிந்தாமணிக்கு கோபம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் மீனா, கதிரை பிடிக்கத்தான் அந்த நடிகரின் வீட்டிற்கு பூ போடுவது போல் பார்க்கப் போகிறார். ஆனால், இது தெரியாமல் சிந்தாமணி, மீனா மீது பயங்கர கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் முத்து- செல்வம் இருவருமே புது பிசினஸ் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த மீனா, நடிகரின் வீட்டில் நடந்ததை பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் வித்யாவின் வண்டி மீது மீனாவை காதலிப்பதாக துரத்திய முருகன் வண்டி வந்து மோதி இருந்தது. வித்யா அவரை திட்ட முருகன் சாரி சொல்லி சமாதானம் செய்கிறார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது விஜயா, பணத்தை ஏற்பாடு செய்தீர்களா? உன்னுடைய சொந்தக்காரர்களிடம் கேட்டு பணத்தை ரெடி பண்ணு என்று சொல்ல, ரோகினியால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அண்ணாமலை, கதிர் விஷயம் பற்றி கேட்க, மீனா செய்யும் சிஐடி வேலை பற்றி முத்து சொல்கிறார். உடனே மனோஜ், பணம் கிடைத்தவுடன் என்னிடம் கொடு என்றவுடன் முத்து, மனோஜை திட்டி விடுகிறார். பின் விஜயா, டீ போடு என்று சொன்னவுடன் பார்லர் அம்மாவை போட்டு தர சொல்லுங்கள் என்று முத்து கிளம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full