கோபத்தில் ரோகினிக்கு வார்னிங் கொடுத்த விஜயா, முத்து செய்யும் பூஜைக்கு வருவாரா மீனா? சிறகடிக்க ஆசை

By subhashini · 28/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அம்மா, இது ஒரு பெரிய விஷயம் என்று நீ வீட்டிற்கு வந்து விட்டாயா? மாப்பிள்ளை உடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்று அறிவுரை எல்லாம் சென்றார். ஆனால் மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை. அதற்குப்பின் சத்யா தன்னுடைய ஓனரின் மகள் ரேகாவை சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார். அப்போது சீதா, நீ காதலிக்கிறாயா? யார் இந்த பெண் என்றெல்லாம் கேட்டு விசாரித்தார். அதற்கு சத்யா, அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் ஓனரின் மகள் என்றார்.

ரேகாவிற்கு உடலில் பெரிதாக பிரச்சினை இல்லை என்று சீதா சொல்லி விட்டார். அதற்குப்பின் சத்யா அங்கு இருந்து கிளம்பியுடன் சிந்தாமணி வந்தார். சிந்தாமணி, ரேகாவை அழைத்துக் கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் மீனா, குற்ற உணர்ச்சியில் தன்னுடைய அப்பாவிடம் மனதுக்குள்ளே புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து, மாலை அணிந்து வீட்டிற்கு வந்தார். கார் செட்டில் பூஜை வைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். மீனா எதுவும் சொல்லாமல் அமைதியாக முறைத்துக் கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

மீனாவின் அம்மா, சத்யா இருவருமே பூஜைக்கு வந்து விடுகிறோம் என்றார்கள். அந்த சமயம் பார்த்து அண்ணாமலை வீட்டிற்கு வந்தார். பின் அண்ணாமலை, முத்து மீது இருந்த கோபத்தில் தான் வீட்டை விட்டு வந்தாயே? வேற என்ன பிரச்சனை? நீ ஏதோ மறைக்கிறாய் என்றார். ஆனால், மீனா உண்மையை சொல்லாமல் ஒன்றும் இல்லை என்று சமாளித்தார். அதற்கு பின் ரோகிணி ஃபோன் செய்து மீனாவை வர சொன்னார். ரோகினி, உன்னுடைய அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை தானே என்றார். அதற்கு மீனா, நான் எதுவும் சொல்லவில்லை. ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லவில்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன் என்றார். அதற்குப்பின் ரோகினி- மீனா ஒன்றாக வருவதை பார்த்து விஜயா முறைத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து- செல்வம் இருவருமே ஒரு கடையில் நின்று இளநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்கம் வந்த அருண், வேண்டுமென்றே இளநீர் குடிப்பது போல முத்துவை கேவலமாக பேசி தீர்த்துக் கொண்டிருக்கிறார். செல்வம், முத்துவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ரோகினி இடம் விஜயா, எங்கு போனாய்? யாரைப் பார்த்தாய்? என்றெல்லாம் விசாரிக்கிறார். ரோகினி, ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் கோபத்தில் விஜயா, மீனாவை எதற்காக பார்த்தாய்? மீண்டும் பொய் சொல்கிறாயா? என்றெல்லாம் திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே ரோகினி, நான் என்னுடைய கிளைன்ட் பார்க்கப் போனேன். அந்த இடத்தில் மீனா இருந்தார். நான் சும்மா பேசிவிட்டு வந்தேன் என்றார். அப்போது வந்து அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? நானும் தான் பார்த்தேன் என்று சொல்கிறார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போடுகிறார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டுகிறார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன். என்னால் பிரச்சனை வேண்டாம் என்று சென்று விடுகிறார். பின் கார் செட்டில் முத்து பூஜை வைத்து இருக்கிறார். அங்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் வருகிறார்கள். அதை பார்த்து முத்துவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full