பைனான்சியார்-சிந்தாமணிக்கு ஆப்பு வைக்க முத்து செய்த வேலை - பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 15/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது சுருதி, தன்னுடைய வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி விஜயா காணவில்லை என்றார். மீனா, ரொம்பவே பதறுகிறார். முத்து, நாங்கள் கண்டுபிடிக்கிறோம். தைரியமாக இரு என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் மனோஜ், தன் அம்மாவிற்காக சமைத்து கொடுத்தார். விஜயா ரொம்பவே வேதனையில் இருந்தார்.

முத்து- மீனா இருவரும் விஜயா இருக்கும் இடத்தை அறிந்து வந்தார்கள். மனோஜ், ஷோரூமில் வசதி இல்லை. இருந்தாலும் விஜயா அங்கேயே இருந்தார். முத்துவை பார்த்தவுடன் விஜயாவிற்கு கோபம் வருகிறது. பேசாமல் அமைதியாகவே இருந்தார். மீனா தன்னுடைய வீட்டில் வந்து தங்குமாறு கெஞ்சி கேட்டார். விஜயா அதெல்லாம் முடியாது என்று ரொம்ப நக்கலாக பேசி இருந்தார். அதற்குப்பின் வீட்டுக்கு போன முத்து-மீனா இருவரும் விஜயா சொன்னதை சொன்னார்கள். அண்ணாமலை, அது அவளுடைய விதி என்று சொல்லி அமைதியாகி விட்டார்.

சிறகடிக்க ஆசை:

அதற்கு பின் விஜயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. மனோஜ் தனக்கு தெரிந்ததை செய்து கொண்டிருந்தார். அதோடு விஜயா கடையில் இருப்பதால் இரண்டு நாட்களாகவே ஷோரூமை திறக்கவே இல்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை பார்த்தவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் அண்ணாமலை, இந்த நிலைமை தேவையா? என்று கூப்பிட்டார். அப்போது முத்து-மீனா இருவரும் அங்கு வந்து விட்டார்கள். மீனா, உங்களுக்கு எந்த வசதியும் குறைவில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செய்து வாருங்கள் என்று கூப்பிட்டார். விஜயா அமைதியாகவே இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், இங்கிருந்தால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். சாப்பாடு கூட செய்து தர முடியாது. நீங்கள் மீனா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று ஏதேதோ சொல்கிறார். அண்ணாமலை, முத்து, மீனா எல்லோருமே கெஞ்சிய பிறகுதான் விஜயா ஒத்துக்கொள்கிறார். அதற்கு மனோஜ், விஜயா அங்கிருந்து கிளம்பியதால் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மீனா அம்மாவின் வீட்டிற்கு விஜயா வருகிறார். மீனாவின் அம்மா, ரொம்ப மரியாதையாகவும் அக்கறையுடன் விஜயாவை கவனித்துக் கொள்கிறார். ஆனால், விஜயா வழக்கம் போல தன்னுடைய திமிருத்தனத்தை காண்பிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது முத்து-மீனா இருவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். விஜயா கிண்டல் அடிக்கிறார். உடனே சத்யா, இருவருமே ஆங்கிலம் வகுப்பிற்கு செல்வதை பற்றி சொல்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா ஆங்கிலம் அன்பிற்கு சென்று விடுகிறார்கள். அங்கு நன்றாக கிளாசெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் முத்துவிற்கு நண்பர் ஆகிறார். அவர் முத்துவை பாராட்டி அவருடைய பிரச்சினையை பற்றி கேட்கிறார். முத்துவும் தன்னுடைய வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி பேசுகிறார். உடனே அவர், நான் வருமானத்துவரித்துறை அதிகாரி கவலைப்படாதே. அந்த பைனான்சியரை சந்தித்து உன் வீட்டு பிரச்சனையை நான் முடித்து வைக்கிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full