தனிமையில் தவிக்கும் விஜயா, முத்து செய்த விஷயத்தால் சந்தோசப்படும் மீனா - பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 7/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, என்னால் மாமாவிற்கு எதுவும் ஆகக்கூடாது. அத்தையின் பயம் போகட்டும். அதற்கு பிறகு நான் வருகிறேன் என்றார். சுருதி, இத்தனை வருடமாக இல்லாமல் இப்போது ஏன் ஒரு சாமியாரை பார்க்கணும். இது உங்களை வீட்டை விட்டு அனுப்ப தான் திட்டம் போட்டார்கள். இதற்கெல்லாம் பின்னாடி ரோகிணி இருப்பாரோ? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார். மீனாவும் ஸ்ருதி சொல்வதை யோசித்துப் பார்த்தார். அந்த சமயம் பார்த்து ரோகினி அந்த இடத்திற்கு வந்தார்.

ரோகினி, என்னை போல் தான் நீங்களும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டீர்கள். எனக்கு சப்போர்ட் செய்தீர்கள் என்றால் மூவருமே அந்த வீட்டில் சந்தோஷமாக வாழலாம் என்றார். சுருதி, நாங்கள் எப்ப வேண்டும் ஆனாலும் அந்த வீட்டுக்கு போகலாம். நாங்கள் உனக்கு உதவி செய்ய மாட்டோம் என்றார். ரோகிணி, என்னை மீறி எப்படி அந்த வீட்டிற்கு போகிறீர்கள் என்று பார்க்கிறேன் என மிரட்டி விட்டு சென்றார். மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் முத்து, ரவி இருவரும் வீட்டு வேலைகளை பிரித்து செய்து கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ் எதுவும் செய்யவில்லை. கேள்வி கேட்டால் விஜயா, மனோஜ் செய்ய மாட்டார் என்றார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த வீட்டின் முதுகெலும்பே மீனா. அவர் இல்லாததால் வீடு கலை இழந்து இருக்கிறது என்றார். விஜயா, மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து, மீனாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது மீனா, ரோகிணி வந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இந்த சாமியார் விஷயத்தில் ரோகினியின் திட்டம் இருக்குமா என்று ஸ்ருதி சந்தேகப்படுகிறார் என்றார். முத்து, சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். மீனா முத்துவிற்காக பார்த்து பார்த்து சமைத்து வைக்கிறார். அப்போது வீட்டின் ஓனர், வாடகை 3000 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். முத்து, மீனா அம்மாவின் குடும்ப சூழ்நிலையை பற்றி எடுத்துச் சொல்லி புரிய வைத்து ஆயிரம் ரூபாய் குறைத்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மனோஜ், ரவி இருவருமே வீட்டிற்கு வரவில்லை.

சீரியல் ட்ராக்:

அண்ணாமலையும் தன்னுடைய நண்பரை வரவைத்து மாடியில் தூங்க சென்று விடுகிறார். விஜயா மட்டும் அந்த வீட்டில் தனியாக இருக்கிறார். தன் வீட்டில் சந்தோஷமாக இருந்த நினைவுகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் விஜயா. இன்னொரு பக்கம் மீனா, முத்து தன் குடும்பத்திற்கு சப்போர்ட் செய்ததை பற்றி பேசி கொண்டு இருக்கிறார். அப்போது தன் அம்மாவிற்காக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று மீனா செல்வதால் முத்து சம்மதிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full