மனோஜின் நிலையை கண்டு பதறிப்போன விஜயா, பார்வதிக்கு கொடுத்த சப்ரைஸ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, ஏமாற்று வேலை செய்து டாக்டர் பட்டத்தை பெறக்கூடாது என்றார். அடுத்த நாள் விஜயா வாயிலேயே உண்மையை வரவைற்பதற்காக முத்து சில வேலைகளை செய்தார். விஜயாவுமே முத்து விரித்த வலையில் சிக்கி கொண்டார். அதற்குப்பின் மீனாவை, விஜயா பயங்கரமாக திட்டி வேலை வாங்குவது எல்லாம் முத்து வீடியோ எடுத்து வைத்தார். அதற்குப்பின் முத்து பிச்சைக்காரர் வேடம் போட்டு விஜயா பக்கத்தில் போய் நிற்க, விஜயா, பயங்கரமாக திட்டி அனுப்பினார். அதை மீனா வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்.
நேற்று எபிசோட்டில் பார்வதி வீட்டில் டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக சில டாக்குமெண்டில் விஜயாவிடம் கையெழுத்து வாங்க வந்தார் கோகிலா. அந்த சமயம் வந்த முத்து, விஜயாவின் சுயரூப வீடியோவை போட்டு காண்பித்தார். அதை பார்த்த கோகிலா, கொந்தளித்து விஜயாவை திட்டி விட்டு சென்றார். டாக்டர் பட்டம் விஜயாவிற்கு கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் முத்து-மீனா என்று விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் விஜயா, நடந்ததை எல்லோரிடமும் சொன்னார். மனோஜ் மட்டும் தான் விஜயாவிற்கு சப்போர்ட் செய்தார்.
சிறகடிக்க ஆசை:
டாக்டர் பட்டத்தை நல்லது செய்துதான் வாங்க வேண்டும். பொய்யாக ஏமாற்றி வாங்க கூடாது என்றெல்லாம் அண்ணாமலை சொன்னார். ஆனால், விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வழக்கம்போல் மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். பின் மனோஜ் தன்னுடைய நண்பர் சொன்னது போல ராணியின் வீட்டிற்கு சென்று தவறாக நடப்பது போல நடித்தார். உடனே ராணி, கத்தி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து மனோஜ் துடைப்பத்தாலே அடி வெளுத்து வாங்கினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, வீட்டில் உள்ள எல்லோருக்குமே சூப் செய்து தருகிறார். அதை சாப்பிட்டு வீட்டில் உள்ள எல்லோருமே புகழ்ந்து பாராட்டுகிறார்கள். ஆனால், விஜயா வழக்கம் போல கிண்டல் செய்தார். அப்போது ஸ்ருதி, என்னுடைய ஹோட்டலுக்கு நீங்க பார்டனராக சேர்ந்து விடுங்கள் என்கிறார். அதற்கு மீனா, நீங்கள் ரவியை சம்மதிக்க வைத்து, அவருடைய மனதில் என்ன இருப்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வருகிறார். மனோஜின் நிலைமை பார்த்து எல்லோருமே பதறிப் போகிறார்கள். விஜயாவிற்கு ரொம்ப பயமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அப்போது மனோஜ், உண்மையை சொல்லாமல் ஒரு பெண்ணை தான் காப்பாற்றியதாக பொய் சொல்கிறார். ஆனால், அதை ரோகினி நம்பவே இல்லை. பின் ரூமில் ரோகினி, என்னானது என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், எல்லா உண்மையும் சொல்ல ரோகினி திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் யோகா கிளாசில் பார்வதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரை காதலிக்கும் நபர் கேக் வாங்கி வந்து பரிசு கொடுக்கிறார். அப்போது மீனா, ப்ரூட் பொக்கே கொடுக்கிறார். மீனாவின் ஐடியாவை பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால், சிந்தாமணி, இதை வளர விடக்கூடாது என்று பொறாமைப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.