ஏலத்தில் விடப்படும் வீடு, சிந்தாமணியின் திட்டத்தை முறியடிப்பாரா முத்து? சிறகடிக்க ஆசை

வீட்டை மீட்க போராடும் முத்து

By ·

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனாவை திட்டி ராஜினாமா செய்ய வேண்டாம் என்றார். ஸ்வேதாவும் மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதனால் மீனா தன்னுடைய ராஜினாமாயும் செய்ய முடிவிலிருந்து பின்வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, இப்ப இருக்கும் பெண்கள் எல்லாம் ரொம்ப உஷாராக இருந்தார்கள். நானும் வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன்.யாரை நம்பியும் நான் இனி இருக்க மாட்டேன் என்றார். முத்து காரில் வந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மனோஜ் கடைக்கு சென்று விட்டார்.

முத்துவும் அந்த பெண்ணின் அம்மாவும் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். மனோஜ் கடைக்கு சென்று அந்த பெண், எல்லா பொருள்களையும் வாங்குவதாக சொல்லி போட வைத்து ஜூஸ் குடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். மனோஜ் அந்த பெண்ணை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஒரு வழியாக முத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து அவருடைய அம்மாவிடம் ஒப்படைத்து விட்டார். ரோகினி, மனோஜை பார்க்க வந்தார். ரோகினி, உன் அம்மா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ், அதெல்லாம் நடக்காத ஒன்று என்றார். இன்னொரு பக்கம் வேலை கேட்டு விஜயா ஒரு இடத்திற்கு சென்று இருந்தார். ஆனால், அங்கு வகுப்பு இலவசமாக தான் சொல்லித் தர வேண்டும் என்று அறியாமல் விஜயா இலட்சக்கணக்கில் சம்பளம் கேட்டார். அப்போது அந்த இடத்திற்கு அசோசியேஷன் மெம்பராக மீனா வந்தார். அவரை பார்த்தவுடன் விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். இலவசமாக நடனம் சொல்லித் தரும் விஷயத்தை மீனா சொன்னவுடன் விஜயா சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் ஸ்ருதி-ரவி இருவரும் ஓட்டலில் நன்றாக வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். அதை கெடுப்பதற்கும் ரவியை தன்னுடன் தன்னுடன் அழைத்து செல்வதற்கும் நீத்து திட்டம் போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து கஷ்டப்பட்டு வண்டிகளை எல்லாம் ரெடி பண்ணி விடுகிறார். இதனால் அந்த ஓனரின் மூலம் 38 லட்சம் ரூபாய் பணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து விடுகிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி முத்துவிற்கு அந்த வீட்டை கிடைக்க விடாமல் பண்ணுவேன் என்று ரோகினியிடம் சொல்கிறார். அதற்குப்பின் மீனா, தன்னிடம் இருக்கும் பணத்தை திருடர்கள் திருடுவது போல கனவு காண்கிறார். இது முத்து, மீனாவிற்கு தைரியம் சொல்லி தூங்க வைக்கிறார். அதற்குப்பின் சிந்தாமணி சீக்கிரமாக முத்துவின் வீட்டை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். மீனா வரும் வழியில் சிந்தாமணி ஆட்கள் பணத்தை திருடுவதற்கு திருடுகிறார்கள். ஆனால், உண்மையில் பணம் இல்லை.

சீரியல் ட்ராக்:

முத்து சொன்னது போல் மீனா நடந்தார். அதற்குப்பின் பணத்தை வாங்குவதற்காக முத்து பைனான்சியர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவர் பணம் எடுத்து வருபவர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் என்று சொல்கிறார். பின் முத்து, டாக்குமெண்டில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு அந்த பணம் வைத்திருப்பவர் இடத்தை சொல்லுங்கள். நானே நேரில் சென்று வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஏலத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 52 லட்சம் வரை சிந்தாமணி வீட்டை கேட்டிருக்கிறார். யாருமே கேட்காததால் ஏலத்தில் விடப் போகிறார்கள். மீனா அதிர்ச்சியில் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full