ஸ்ருதி அம்மாவின் வலையில் சிக்கிய ரவி, கோபத்தின் உச்சத்தில் முத்து - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-ரவி இருவருமே, நீ அம்மா பேச்சைக் கேட்டு ரோகினியை கஷ்டப்படுத்துகிறாய். இப்படியே செய்தால் உன் நண்பர் சொல்வது போல் ரோகினி, எங்கேயாவது போய்விடுவார் என்று சொன்னவுடன் மனோஜ் பயந்தார். இன்னொரு பக்கம் சுருதி, மீனா, ரோகினி மூவருமே தங்களுடைய கணவன்மார்கள் செய்வதை பற்றி புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா- சுருதி இருவரும் நீங்கள் மனோஜை உங்கள் கண்ட்ரோலில் வைக்க பாருங்கள் என்று சொன்னார்கள். மறுநாள் காலையில் விஜயாவிடம் மனோஜ், நான் ரோகினியை ஷோ ரூமுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் அவர் பயங்கரமாக கோவப்பட்டு சண்டை போட்டார்.
அண்ணாமலை, ரோகினிக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். உடனே விஜயா, நீ உன் மனைவியுடன் சந்தோசமாக இரு. ஆனால், என்னுடன் பேசாதே. என் உறவை முடித்துக் கொள் என்றவுடன் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் மீனாவிற்கு போன் செய்த சீதா, அருணின் அம்மா வீட்டிற்கு வருகிறார்கள் என்றவுடன் மீனா முத்துவிடம் ஏதேதோ சொல்லிவிட்டார் கிளம்பி விட்டார். பின் தன்னுடைய அம்மாவிடம் அருணின் அம்மா வரும் விஷயத்தை மீனா சொன்னார். அதன் பின் அருணும், அவர் அம்மாவும் வந்தார்கள். ஆனால், அருண் வெளியேவே இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அருணின் அம்மா, நீங்கள் என் பையனை பற்றி தவறாக புரிந்து இருக்கிறீர்கள். இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்று பேசி இருந்தார். மீனாவின் அம்மா, என் மாப்பிள்ளை முடிவு தான் எங்களுடைய முடிவு. அவர் பேச்சை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அவருக்கு இந்த திருமணத்தில் சம்மந்தமில்லை. தயவு செய்து கிளம்புங்கள் என்று அவரை அனுப்பி விட்டார். பின் அருணின் அம்மா, இந்த திருமணத்தில் அவர்கள் வீட்டில் யாருக்குமே விருப்பம் இல்லை என்றார். இன்னொரு பக்கம் முத்துவை சந்தித்த சீதா, அருணை காதலிக்கும் விஷயம் பற்றி பேசி இருந்தார். உடனே முத்து, நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்க்கிறேன். தயவு செய்து இந்த விஷயமாக என்னிடம் பேசாதே என்று கோபப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து, எங்கே போயிருந்தாய்?அருணின் அம்மா வீட்டிற்கு வந்தாரா? என்று கேட்டார். அதற்கு மீனா, நீங்கள் கோபப்படுவீர்கள் என்று தான் நான் சொல்லவில்லை. அருண் என்னை தனியாக சந்தித்து பேசினார். அவர் சீதாவை திருமணம் செய்தில் உறுதியாக இருக்கிறார் என்று சொன்னவுடன் முத்து, அதெல்லாம் முடியாது. நான் சீதாவிற்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று இருவருக்கும் இடையே விவாதம் நடக்கிறது. இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை தன் வழிக்கு கொண்டு வருவதற்கு யாரோ ஒருவரிடம் பேசுவது போல் பேசி இருந்தார். அதைக் கேட்ட மனோஜ் சந்தேகப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி பேசியிருப்பதை ஒட்டு கேட்ட மனோஜ், வெளியே வந்து யாரிடம் பேசுகிறாய்? என்று கேட்கிறார். ரோகினி, என்னுடைய பிரண்டு என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் வீட்டுக்கு ஸ்ருதி அம்மா வருகிறார். அவர் 10 லட்ச ரூபாய் செக் உடன்
பழம், ஸ்வீட் தட்டு வைத்து கொடுக்கிறார். அண்ணாமலை எதற்கு என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி அம்மா, ரவி தொடங்க இருக்கும் புது ஓட்டலுக்கு தான். நாங்கள் கொடுக்கும் சின்ன தொகை என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், ரவிக்கு விருப்பமே இல்லை.
சீரியல் ட்ராக்:
ரவி, நான் சொந்தமாக ஆரம்பிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால், சுருதி ஒத்துக் கொள்ளவே இல்லை. விஜயா, பணத்தை வாங்க சொல்லி ரவியை கட்டாயப்படுத்துகிறார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் ரவி முடிவு தான், நாங்கள் தலையிட மாட்டோம் என்றார். பின் ஸ்ருதி கட்டாயத்தினால் ரவி மனதே இல்லாமல் அந்த பணத்தை வாங்கி கொள்கிறார். வழக்கம்போல் விஜயா, ரோகினையும் மீனாவையும் ரொம்ப மட்டம் தட்டி ஏளனமாக பேசுகிறார். அதற்குப் பின் தன்னுடைய நண்பர்களிடம் மீனா, சீதாவின் கல்யாணத்தை பற்றி பேசுகிறார். அவர்களுமே நல்ல பையன் என்றால் கல்யாணம் செய். உன்னுடைய வீட்டுக்காரரிடம் எடுத்துச் சொல்லி புரிய வை என்கிறார்கள். இன்னொரு பக்கம் செல்வம்-முத்து, சீதாவின் காதலைப் பற்றி பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது