மோதிக்கொள்ளும் சிட்டி-முத்து, ரோகினியை கிண்டல் செய்யும் ஸ்ருதி - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்து கூப்பிட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்போது முத்து, மீனா, ஸ்ருதி சாப்பிட்டு இருந்தார்கள். விஜயாவை கிண்டல் அடித்து கேலியாக பேசி இருந்தார்கள். இதனால் கோபமடைந்த விஜயா கத்தி இருந்தார். ஆனால், கடைசியில் அது விஜயா கண்ட கனவு. இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான் என்று அவரை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் பாட்டி, நான் ஊருக்கு கிளம்புகிறேன். சண்டை போடாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். சீக்கிரத்தில் குழந்தையை குழந்தையை பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார்.
அதற்குப்பின் மனோஜ்- ரோகினி இருவரும் வேலைக்கு கிளம்பி இருந்தார்கள். அப்போது மனோஜிடம் விஜயா, நீ இனிமேல் ரோகினி இடம் பேசக்கூடாது. அவள் தனியாகவே போகட்டும். அவள் பேசக்கூடாது. ரூமுக்கு போகக்கூடாது என்று நிறைய கண்டிஷன் போட்டார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. ரோகினி, எனக்கு தான் ஆடிட்டிங் தெரியும் என்று சொன்னவுடன் இன்னும் கோபப்பட்ட விஜயா, என் மகனை ஏமாத்தாதே. அவன் பார்த்துக் கொள்ளுவான். உன் வேலையை செய் என்று மிரட்டி அனுப்புகிறார். வேதனையில் உள்ளே சென்று ரோகினி அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்து அவருடைய அம்மா, என்னுடைய பிறந்தநாளை மறந்து விட்டாயா? என்று பேசி இருந்தார். பின் ரோகினி தன்னுடைய அம்மாவையும் மகனையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து, தன் மனைவியை காதலித்த முருகனை ரோடில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், நான் என்னுடைய லவ்வை சொல்ல போகிறேன். ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் முத்து, இந்த முறை சரியான பெண்ணை தேர்ந்தெடுத்தாயா? என்று கிண்டலாக பேசி இருந்தார். அதற்கு பின் இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். கோயிலில் சீதா-அருண் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அருண், எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்? வீட்டில் பேச வரட்டுமா என்று கேட்டார். அதற்கு சீதா, நாம் இருவரும் பழகி தெரிந்து கொள்ளலாம். அதற்கு பிறகு வீட்டில் பேசலாம். யாராவது பார்ப்பதற்குள் கிளம்பி விடுங்கள் என்றார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் பார்த்து மீனா கோயிலுக்கு வந்தார். அப்போது அவர், வீட்டில் ரோகினி செய்த வேலையை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். அதற்குப்பின் கோயிலுக்குள் சீதா இருக்கும் விஷயத்தை அறிந்து உள்ளே மீனா வந்தார். அதற்குள்ளேயே அருண் சென்று விட்டார். சீதாவும் ஏதேதோ சொல்லி மீனாவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். பின் முத்து- முருகன் இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். கோயிலில் அருணை பார்த்தவுடன் முருகன் அவரிடம் பேசி இருந்தார். அதற்கு பின் முத்து, இந்த ஆளை தெரியுமா? என்று கேட்டார். அதற்கு முருகன், நன்றாக தெரியும். ரொம்ப நல்லவர். அவருடைய காதல் சக்சஸ் ஆகிவிட்டது என்று சொன்னார். உடனே முத்து, அவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவப்பட்டவள் என்று நக்கலாக பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஷோரூமில் மனோஜ் ரோகினியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருமே மனோஜுக்காக ரோகினி செய்த வேலையை பற்றி சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு இரண்டு பேரை அழைத்து வருகிறார். அவர்கள் காரிலேயே குடிப்பதால் முத்துவிற்கு கோபம் வந்து அவர்களை அடிக்கிறார். உடனே அவர்கள், நாங்கள் சிட்டி ஆட்கள் என்று சொல்கிறார்கள். உடனே முத்து, அவர்களை சிட்டி இடத்திற்கு அழைத்து வந்து வெளுத்து வாங்குகிறார். அந்த இடத்தில் மீனாவின் தம்பி சத்யாவும் இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து, என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு, நான் காலேஜுக்கு போகும்போது என்னை வழி மறைத்து அழைத்து வந்து விட்டார்கள் என்று சத்யா சொல்கிறார். முத்துவிற்கு இன்னும் கோபம் வருகிறது. அப்போது சிட்டி, நீ எப்படி தேர்வு எழுதி விடுகிறாய்? என்று பார்க்கிறேன் என்று சொன்னவுடன் முத்து, என்னை மீறி நீ அவன் மீது கையை வைத்து பார் என்று சவால் விடுகிறார். இன்னொரு பக்கம் வித்யாவிற்கு முருகன் தன்னுடைய காதலை சொல்ல, வித்யாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார். அதற்குப்பின் ரோகினி, கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சுருதி, பொய் சொன்னீர்கள் என்றவுடன் உங்களை சமைக்க சொல்லி விட்டார்களா? என்று நக்கலாக வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.