மீனா செய்த வேலையால் சந்தோஷப்பட்ட ஸ்ருதி-ரவி, கடுப்பில் விஜயா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, அருணின் அம்மாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார். அங்கு சீதா, அருண் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்தவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்து விசாரித்தார். உடனே சீதா, நான் காதலிக்கும் நபருடைய அம்மா இவங்கதான் என்று சொன்னவுடன் மீனா அமைதியாகி விட்டார். கடைசியில் வீட்டில் முத்து, மீனா, ரவி, சுருதி, செல்வம் எல்லோருமே சிந்தாமணி வீட்டில் நகையை எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, வருமானவரி துறை அதிகாரிகள் போல் நாடகம் செய்துதான் இந்த வேலையை செய்யணும் என்று சொன்னவுடன் எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.
முத்து, சுருதி, ரவி, செல்வம் ஆகிய நான்கு பேருமே வருமானத்துறை அதிகாரிகள் போல் வேடம் அணிந்து சிந்தாமணியின் வீட்டிற்கு சென்றார்கள். பார்வதி வீட்டில் பூஜை இருக்கிறது என்று சிந்தாமணியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். சிந்தாமணி வெளியே கிளம்பிய உடன் முத்து உடைய குருப் சிந்தாமணியின் வீட்டிற்குள் சென்றார்கள். பின் அங்கு உள்ளவர்கள் சுருதி பேசியதைக் கேட்டு பயந்து விட்டார்கள். பின் வீட்டில் முத்து உடைய குரூப் பணத்தை தேடுகிறார்கள். ஒரு வழியாக மீனாவின் பணம் கிடைத்து விட்டது. இன்னொரு பக்கம் சிந்தாமணி வயிறு சரியில்லை வீட்டிற்கு கிளம்பலாம். பூஜைக்கு அப்புறம் போகலாம் என்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனாவின் பணத்தை எடுத்தவுடன் முத்துவும் அவருடைய குரூப்பும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ஸ்ருதி மட்டும் வீட்டிற்குள் இருந்தார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வீட்டுக்குள் வந்தார். சுருதி ஏதேதோ சொல்லி சிந்தாமணியிடம் தப்பித்து வந்துவிட்டார். பின் மீனாவிற்கு ஃபோன் பண்ண முத்து, பணம் எடுத்த விஷயத்தை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்குள் வந்த சிந்தாமணி இடம், வருமானத்துறை அதிகாரிகள் வந்தார்கள். மஞ்சப்பை பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னவுடன் சிந்தாமணிக்கு சந்தேகம் அதிகமானது.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் போன் செய்த மீனா, வருமானவரித்துறை அதிகாரிகள் போல் என்னுடைய ஆட்கள் தான் வந்தார்கள். அடுத்தவர்களை ஏமாத்தி பிழைக்க நினைக்காதே. வாழு வாழ விடு என்றெல்லாம் பயங்கரமாக பேசி இருந்தார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, அண்ணாமலை இடம் மீனா பணம் கிடைத்த விஷயத்தை சொன்னார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகி கோபப்பட்டார். பின் முத்து, அம்மாவின் நண்பர் சிந்தாமணி தான் இந்த வேலையை செய்தார் என்று சொன்னவுடன் விஜயா உள்ளுக்குள் பயப்பட்டார். உடனே ஸ்ருதி-ரவி இருவருமே இந்த பணத்தை நாங்கள் சிந்தாமணி வீட்டில் தான் எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, இது சிந்தாமணி தான் செய்தார் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். உடனே ரவி, அவர்கள் வீட்டில் தான் பணத்தை எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை. கடைசியில் அண்ணாமலை, நீ சிந்தாமணி உடன் இருக்கும் நட்பை விட்டுவிடு என்று அறிவுரை சொல்கிறார். ஆனால் விஜயா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் மீனா, பணத்தை எடுத்துக்கொண்டு சீதாவை பார்க்கப் போகிறார். அங்கு சீதாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு நடந்ததை சொன்னவுடன் அவர் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் சீதா, கோவிலுக்கு வந்த அருணிடம் பணத்தை கொடுத்து நடந்ததை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் ஸ்ருதி- ரவி வேலை செய்யும் ஹோட்டலில் நீத்து, youtube ரிவியூவர் வருகிறார். நம்முடைய ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ரிவ்யூ கொடுத்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். அப்போது வந்த மீனா, நன்றி சொல்லும் விதமாக சுருதி, ரவிக்கு வாழைப்பூ வடை, பூசணியில் ஸ்வீட் செய்து தருகிறார். அதற்குப்பின் ரிவியூவர் ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். அப்போது சுருதி, மீனா செய்த சாப்பாட்டை கொடுத்தவுடன் அவர் சாப்பிட்டு பிரமாதமாக ரொம்பவே பாராட்டி ஹோட்டலை பற்றி ரிவியூ சொல்லியிருந்தார். அதற்குப்பின் நீத்து, உங்களால் தான் இதெல்லாம் நடந்தது என்று சொல்லி அவர்களுக்கு பணத்தை பரிசாக கொடுக்கிறார். பின் இதை வீட்டில் சுருதி, ரவி இருவரும் சொல்லி மீனாவிற்கு பணத்தை கொடுத்து சந்தோஷப்படுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து விஜயா, ரோகினிக்கு கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.