மச்சானுக்காக முத்து செய்த வேலை, விஜயாவை வெளுத்து வாங்கிய ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

By subhashini · 8/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. ரோகினியும் அவருடைய தோழியும், இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போட்டார்கள். பின் விழாவில் விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைத்தது, பக்கத்து வீட்டுக்காரர் பயங்கரமாக திட்டியதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டி இருந்தார்கள். அதற்குப்பின் ரோகினியின் தோழி குச்சி ஆட்டத்திற்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கி வந்து எல்லோரையும் நடனமாட வைத்தார்.

வீட்டில் உள்ள எல்லோருமே நடனம் ஆடினார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று முத்து போனை எடுத்த ரோகினி, அந்த வீடியோவை பார்த்து தன் மொபைலுக்கு மாற்ற பார்த்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா அவர் மீது விழ போன் கீழே தவறி விழுந்து விட்டது. இதனால் முத்து கோபப்பட்டு கத்தி போனை வாங்கி வந்து விட்டார். கடைசி வரை அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை என்று ரோகினி வருத்தப்பட்டார். மேலும், கிருஷ்ணர் வேடம் போட்டு கிரிஷை வீட்டிற்கு முத்து-மீனா அழைத்து வந்தார்கள். இதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்பட, விஜயா மட்டும் கோபப்பட்டார்.

சிறகடிக்க ஆசை:

பின் மீனா, கிருஷ்ணர் பாட்டை பாட, கிர்ஷை முத்து கொஞ்சி இருந்தார். இதையெல்லாம் பார்த்து ரோகினி அம்மா, நீங்கள் எதற்கு என் பேரனுக்கு தேவையில்லாமல் நம்பிக்கை கொடுக்கிறீர்கள். அவனுக்கு பாட்டி, அம்மா எல்லோருமே இருக்கிறார்கள். இன்னொரு முறை தத்தெடுப்பதை பற்றி பேசாதீர்கள். எங்கள் வீட்டிற்கும் வராதீர்கள் என்று கோபமாக பேசி கிளப்பி விட்டார். இதனால் முத்து-மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள். நேற்று எபிசோட்டில் முத்து, மீனாவை திட்டியதை நினைத்து ரோகினி அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழுதார்.

நேற்று எபிசோட்:

அவரை ரோகினியின் தோழி சமாதானம் செய்தும் புலம்பி அழுது கொண்டே இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, நீ பேசுனது சரி என்று அவரை பாராட்ட, கோபப்பட்டு அவர் அம்மா, ஏன் இந்த பாவத்தை செய்ய வைத்தாய்? அவர்கள் நல்லவர்கள் என்று சொன்னார். வழக்கம்போல ரோகினி, அவர் அம்மாவை திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட, இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் மீனாவின் மனதை மாற்ற முத்து அவருடைய அம்மா வீட்டிற்கு அழைத்து போனார். அங்கு கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார்.

இன்றைய எபிசோட்:

இதை அறிந்த முத்து, நான் எப்படியாவது எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய தம்பியை நினைத்து வருத்தப்பட்டு மீனா கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சுருதிக்கு வந்த கொரியரை விஜயா பிரித்து பார்த்து இருக்கிறார். அந்த சமயம் வந்த ஸ்ருதி, என்னுடைய பார்சலை நீங்கள் எதற்கு பிரித்து பார்த்தீர்கள்? என்று கோபப்பட்டு தன் மாமியார் என்று கூட பார்க்காமல் திட்டி விடுகிறார். ஆனால், ரவி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே சத்யாவிற்காக கல்லூரிக்கு செல்கிறார்கள். அங்கு பிரின்ஸ்பலை பார்க்க முடியாது என்று சொன்னவுடன் அங்கிருக்கும் ஒருவரிடம் எப்படி பார்ப்பது எல்லாம் விசாரிக்கிறார்கள். அவரைப் பார்க்க முடியாது, அவர் யாரிடமும் பேச மாட்டார் கிளம்புங்கள் என்று சொல்லி விடுகிறார். இருந்தாலுமே விடாமல் முத்து அந்த நபரிடம் பிரின்ஸ்பல் பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் கேட்கிறார். பின் தன் மச்சானுக்காக ஒரு புது ஐடியா போடுகிறார். இன்னொரு பக்கம் கடையில், லாட்ரியில் 25 கோடி பணம் விழுந்து இருக்கு என்று ஒருவர் பொருள் வாங்க வருகிறார். மனோஜ் ஷாக் ஆகி நிற்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full