கவலையில் தேடி அலையும் முத்து, வீட்டில் இருந்த மீனா, ஸ்ருதி கொடுத்த டீவ்ஸ்ட்- சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.
அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். பின் வீட்டில் ரூம் ப்ரச்சனை வருகிறது. இதற்கு அண்ணாமலை முடிவு கட்ட நினைக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல்:
கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்தார். பின் முத்து- மீனா அவர்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வழக்கம்போல் விஜயா வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டுகிறார். பின் மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். இதை பார்த்து ரோகினி கோபம் அடைந்து கிருஷ்-மீனாவை பிரிக்க வேண்டும் என்ற திட்டம் போட்டார். ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் யார் என்பது தெரிந்து விட்டது. பின் கிரிஷ் கண்ணை திறக்கும் போது தன் அம்மா ரோஹினியை பார்த்து சந்தோசப் பட்டார்.
சீரியல் ட்ராக்:
அதன் பின் வீட்டில் முத்துவின் நண்பர் தன்னுடைய அண்ணன் கல்யாணம் என்று பத்திரிக்கை வைக்க வருகிறார். அப்போது முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்கிறார். பின் மீனா வீட்டில் இல்லை. நேற்று எபிசோடில் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஜயா- ரோகினி இருவருமே சந்தோஷப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பதறி போகும் முத்து:
எங்கெங்கோ முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். பின் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து மீனாவின் தம்பி சத்யாவும் முத்து மீது புகார் கொடுக்க வருகிறார். இருவருக்கும் இடையே பிரச்சனை முட்டுகிறது. பின் போலீஸ் 24 மணி நேரம் கழித்து தான் புகார் கொடுக்க வேண்டும் என்று அவர்களை அனுப்பி விடுகிறார். இறுதியில் முத்து வீட்டிற்கு வருகிறார். அங்கு மீனாவை பார்த்து சந்தோசப்பட்டு பயங்கரமாக திட்டுகிறார். மீனா, நான் பூ கட்டுவதற்கு போனேன். சுருதி இடம் சொல்லிவிட்டு தான் சென்றேன் என்கிறார்.
இன்றைய எபிசோட்:
உண்மையில், மீனா சொல்லும்போது ஸ்ருதி காதில் ப்ளூடூத் இருந்ததால் அவர் சொன்னதைக் கேட்கவில்லை.
பின் வீட்டிற்கு வந்து சுருதி, எப்போது மீனா வந்தீர்கள்? முத்து ரொம்ப பயந்து விட்டார் என்று சொன்னவுடன் எல்லோருக்குமே ஆச்சரியம் ஆகிறது. நான் உங்களிடம் சொல்லிட்டு தானே சென்றேன் என்று மீனா சொல்ல உடனே ஸ்ருதி, நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே என்று கூறுகிறார். இனிவரும் நாட்களில் மீனா சொல்லவில்லை என்று வீட்டில் விஜயா பிரச்சனை செய்வாரா? ஸ்ருதி மீது தவறா? சத்யா என்ன செய்ய காத்திருக்கிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.