இரண்டு மாத காதல், இந்த வாரம் நிச்சயதார்த்தம்- தன் காதலியை அறிமுகம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ, அடடே இவங்க தானா
தன்னுடைய காதல் குறித்து சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் அறிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல், கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் கொலு விழா நடைபெறுகிறது. இதில் முத்துவின் போனிலிருந்து சத்யா வீடியோவை எடுக்க ரோகிணி பல திட்டங்களை போட்டார்.
இருந்தும், எதுவுமே கை கொடுக்கவில்லை. பின் முத்து, மீனாவை அவருடைய அம்மா,கிரிஷ் வைத்து ரோகினி அசிங்கப்படுத்தினார். இருவருமே ரொம்ப மனமடைந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் சத்யா கல்லூரிக்கு ஒழுங்கா போகாததால் தேர்வு எழுதக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால்
முத்து, எப்படியாவது உன்னை தேர்வு எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இப்படி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
சிறகடிக்க ஆசை:
மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார்.
வெற்றி வசந்த் குறித்த தகவல்:
இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய காதலியை அறிமுகம் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் தான். இவர் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். முதல் சீரிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
வெற்றி வசந்த் காதல்:
இதை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை அறிவித்து இருக்கிறார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு எளிமையாக நடைபெற இருக்கிறது.
வெற்றி வசந்த் பதிவு:
இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெற்றி வசந்த், கூடிய விரைவிலேயே எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எங்களுடைய காதல் பயணம் தொடங்கி இரண்டு மாதம் ஆகிவிட்டது என்று கூறி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.