ரோகினியை வெளுத்து வாங்கும் வித்யா, அசிங்கப்படுத்திய ஸ்ருதி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டின் ஓனர், சீதா காதலிக்கும் விஷயமாக முத்து விடம் பேசினார்கள். அப்போது அவர்கள், சீதா காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து வைத்து விடுங்கள். இல்லை என்றால் அவள் வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போகிறாள் என்றெல்லாம் சொன்னார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. உடனே சீதாவை அழைத்து முத்து திருமணத்தை பற்றி பேசி இருந்தார். ஆனால், சீதாவால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை சந்தித்து போலி நகையை பற்றி பேசினார். உடனே சிட்டி, எனக்குமே தெரியாது. நானும் உங்களை போல தான் ஏமாந்து இருக்கிறேன் என்று சொன்னார்.
அதற்கு ரோகினி, என் பணத்தை கொடுங்கள் என்று கேட்டார். சிட்டி, நீங்கள் நகையை கொடுத்தால் பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இதனால் ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் இதை பற்றி மனோஜிடம் ரோகினி சொன்னார். அதற்கு மனோஜ், பணம் இல்லை என்றால் அம்மா சும்மா விட மாட்டார்கள். தயவுசெய்து ஏதாவது செய். நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று வழக்கம்போல் அம்மா பிள்ளையாக பேசி இருந்தார். அதனால் ரோகினி கோபம் வந்து மனோஜை திட்டுகிறார். பின் வித்யாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் முருகனுக்கு போன் செய்து ரோகினி பணத்தை கேட்டார். அதற்கு அவர், நான் யோசித்து சொல்கிறேன் என்றார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மனோஜ் ரூமிற்கு வந்த விஜயா, நீ எதற்காக? கீழே படுத்து இருக்கிறாய் என்று மனோஜை கேட்டு ரோகினியை திட்டினார். இதனால் மனோஜ் தனியாக படுக்க சென்றார். இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவி இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ருதி, ரெஸ்டாரன்ட் விஷயமாக பற்றி பேச, கோபத்தில்
இருவருக்குமே வாக்குவாதம் அதிகமானது. மறுநாள் காலையில் ரோகினி-மனோஜ் இருவருமே சந்தோசமாக பேசிக்கொண்டு வெளியே வந்தார்கள். இதை பார்த்த விஜயா, பணத்தை சீக்கிரமாக ரெடி பண்ணு. இல்லை என்றால் ரெண்டு பேரும் பிரிந்து இருக்க வேண்டியது என்று மிரட்ட, ரோகினிக்கு கோபம் அதிகமானது.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்து சீதாவிற்காக மாப்பிள்ளை பார்ப்பதற்காக முத்து ஒரு இடத்திற்கு சென்று இருந்தார். அருணின் ஜாதகத்தையும், சீதா ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த இருவருக்குமே பொருத்தம் நல்லா இருக்கிறது. அவர்களுடைய அம்மாவை அழைக்கிறேன் என்று அருணின் அம்மாவை கூப்பிட்டார். அதை பார்த்தவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இந்த சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம் என்று முத்து சொன்னார். இதை கேட்டு அருண் அம்மாவும் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மீனாவிடம் சுருதி, நீங்கள் ரவியின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்கள் என்றார். மீனாவும் ரவியிடம் பேச்சு கொடுத்து அவருக்கு பிடித்த விசயத்தை சொல்ல வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, வித்யாவை சந்திக்கப் போகிறார். அப்போது வித்யா, யாரை கேட்டு நீ முருகனிடம் பணம் கேட்டாய்? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று கோபமாக பேசுகிறார். அதற்கு ரோகினி, எனக்கு ப்ரச்சனை. வேறு வழியில்லாமல் தான் அவரிடம் கேட்டேன் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்டு வித்யா, நீ உன் குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் பிரச்சனையில் மாட்டியிருக்கிறாய். நீ உண்மையாக இருந்தாலே உனக்கு எந்த பிரச்சனையுமே வராது. இந்த உலகத்தில் எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கிறது. அவர் அவர்கள் பிரச்சனையை அவர்கள் தான் பார்க்கிறார்கள் என்று ரொம்ப மோசமாக திட்ட, ரோகினி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டுக்கு வந்த ரோகினி, வித்யா பணம் தரவில்லை. எனக்கும் அவளுக்கும் சண்டை வந்துவிட்டது. நீ பணம் கொடுத்து உதவி செய் என்று கேட்கிறார். உடனே மனோஜ், அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்று வழக்கம்போல ஜகா வாங்கி கொள்கிறார். கடைசியில் ரோகினி, ஸ்ருதியிடம் பண உதவி கேட்கிறார். அப்போது ஸ்ருதி, நான் ரெஸ்டாரண்டில் பணத்தை போட்டு விட்டேன் என்கிறார். உடனே ரோகினி, மீனா கேட்டிருந்தால் செய்திருப்பீர்கள் என்கிறார். அதற்கு சுருதி, மீனா பொய் சொல்லி ஏமாற்ற மாட்டார். அத்தையை காக்கா பிடிக்க மீனா எதுவும் வாங்கித் தர மாட்டார். மீனா உங்களைப் போல் கிடையாது என்று சொல்கிறார். ஸ்ருதி பேசியதை கேட்டு கோபப்பட்டு ரோகினி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது