சிந்தாமணி விரித்த வலையில் சிக்கினாரா மீனா? அசிங்கப்பட்ட விஜயா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 10/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா, தனக்கு கிடைத்த புது ஆர்டரை பற்றி முத்துவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் கோபத்தில் சிந்தாமணி, மீனாவை பற்றி தப்புத் தப்பாக விஜயாவிடம் சொன்னார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மாமியாரின் கொட்டத்தை அடக்கத்தான் வேலைக்கு போவதாக மீனா சொன்னது போல் சொன்னார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் சிந்தாமணி, மீனாவுக்கு புதிய ஆர்டரை கிடைக்க விடாமல் பண்ணுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜயாவை உஷ்பேத்தி விட்டார்.

இதனால் கொந்தளித்த விஜயா, வீட்டிற்கு வந்து பயங்கரமாக மீனாவை திட்டி இருந்தார் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் மீனாவை மோசமாக திட்டி இருந்தார். செல்வத்தின் வண்டியை அந்த ட்ராபிக் போலீஸ் பிடித்து விட்டார். இதை முத்துவிடம் செல்வம் சொல்ல, அதற்கு முத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்துமிடம் விஜயா, மீனாவை பற்றி குறை சொல்லி சண்டை போட்டார். ஆனால், முத்து அதைப்பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை.

சிறகடிக்க ஆசை:

முத்து-மீனா இருவரும் புதிய ஆர்டர் பற்றி பேசி, அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சீதா, அந்த ட்ராபிக் போலீஸின் அம்மாவை நன்றாக கவனித்துக் கொண்டார். இதை பார்த்தவுடன் அவருடைய அம்மாவிற்கும், போலீசுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த டிராபிக் போலீஸ்க்கு, சீதா மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கிறது. இன்னொரு பக்கம் மீனா, வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு ஆர்டருக்காக செல்ல பார்த்தார். அந்த சமயம் பார்த்து விஜயாவிற்கு போன் செய்த சிந்தாமணி, மீனா ஆர்டரை முடிக்க விடாமல் வீட்டிலேயே வையுங்கள்.

நேற்று எபிசோட்:

அவள் மண்டபத்திற்கு வரக்கூடாது என்று சொன்னவுடன் விஜயாவும் வீட்டில் உள்ள எல்லோரையும் அனுப்பி விட்டு, மீனாவை வெளியில் அனுப்பாமல் இருப்பதற்கு புது டிராமா போட்டார். இந்நிலையில் இந்த எபிசோட்டில் விஜயா, மீனாவை வெளியே போக விடாமல் ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொள்ள வைத்துக் கொண்டே இருக்கிறார். மீனாவிற்கும் என்ன சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார். இன்னொரு பக்கம் முத்து, நேரம் ஆகிவிட்டது மண்டபத்திற்கு வா என்று மீனாவிடம் சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

உடனே மீனா, வீடியோ கால் மூலம் எப்படி எல்லாம் டெக்கரேஷன் செய்வது என்று சொல்கிறார். ஒவ்வொரு இடத்திற்கும் என்ன வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க, அதற்கு ஏற்ப மண்டபத்தில் இருப்பவர்களும் செய்கிறார்கள். அப்படியே விஜயா சொல்லும் வேலையையும் மீனா செய்து கொண்டிருக்கிறார். ஒரு வழியாக வீடியோ கால் மூலமாகவே மீனா டெக்கரேஷன் ஒர்க்கை சூப்பராக செய்து முடித்து விடுகிறா.ர் இதை பார்த்த சிந்தாமணிக்கு பயங்கர கோபம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

பின் அவர் விஜயாவிற்கு கால் செய்து, மீனா ஆர்டரை முடித்து விட்டார் என்று சொன்னவுடன் விஜயா ஷாக்காகி, நான் மீனாவை வெளியே அனுப்பவில்லையே? எப்படி செய்து முடித்தால் என்று கேட்டார். அதற்கு சிந்தாமணி, உங்களை விட மீனா தந்திரக்காரி. உங்களிடம் ஒரு வேலையை சொன்னது வேஸ்ட் என்று திட்டி விட்டு வைத்து விடுகிறார். இவர்கள் இருவரும் பேசியதை வெளியே நின்று மீனா கேட்டு விடுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி ஹோட்டலில் வேலை சேர்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full