விஜயா செய்த அட்ராசிட்டி, சொந்த கடையிலேயே பணத்தை திருடும் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 8/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, பார்வதியை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு மீனாவிற்கு புடவை தந்து அன்பாக பாசமாக பேசி இருந்தார். இதை பார்த்து மீனாவிற்கே ஷாக் ஆனது. அதோடு வீட்டில் உள்ள எல்லோருமே கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால், வீடியோ எடுக்கும் விஷயம் முத்து, மீனாவிற்கு தெரியவில்லை. விஜயா பாசமாக தான் பேசுகிறார் என மீனா நினைத்து கொண்டார். அதற்குப்பின் வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, மீனாவை திட்டி புடவையை உள்ளே கொண்டு போய் வைக்க சொன்னார்.

அதற்குப்பின் கிரிஸ் உடன் விஜயா சந்தோமாக கொஞ்சி பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க சொன்னார். இதையெல்லாம் பார்த்து ஸ்ருதி, ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வீடியோவை எல்லாம் எடுத்து முடித்த பின் விஜயா மீண்டும் அந்நியனாக மாறி கிரிஷை திட்டினார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவை பார்க்க அருணின் அம்மா, சீதா வந்தார்கள். அப்போது அருணின் அம்மா, தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடத்த இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வரவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பின் மீனாவின் அம்மா, உன் மாமியார் வீட்டு குடும்பத்தில் சொல்லிவிடு என்று மீனாவிடம் சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு அழைக்க மீனாவின் அம்மா, முத்து வீட்டிற்கு வந்தார். அங்கு மீனாவின் அம்மா, சீதா பங்ஷனை பற்றி பேசி இருந்தார். அண்ணாமலை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. இன்னொரு நாள் நான் வந்து பார்க்கிறேன். என்னுடைய மகன்கள் மருமகள்கள் எல்லோருமே வருவார்கள் என்று சொன்னார். உடனே விஜயா, நான் இல்லாமல் இந்த பங்க்ஷன் நடப்பதா? நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் சீதாவின் அம்மாவிற்கு ஷாக் ஆனது.

நேற்று எபிசோட்:

மறுநாள் காலையில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு முத்துவின் வீட்டிலிருந்து எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது பார்வதியிடம் விஜயா, அங்கு விழாவில் நடப்பது எல்லாம் வீடியோ எடுக்க சொல்லி விட்டார். அதற்குப்பின் விஜயா விழாவிற்கு வந்த ஒவ்வொருவராக பார்த்து அன்பாக பேசி பழகினார். இதை எல்லாம் வீடியோ எடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து சீதாவிற்கு ஷாக் ஆனது. முத்துவும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். விஜயாவுமே தன் மகளுக்கு செய்வது போல பார்த்து பார்த்து செய்தார். நல்லபடியாக சீதாவின் தாலி பிரித்து கோரிக்கும் விழா நடந்து முடிந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா விசேஷத்திற்கு வந்த எல்லோருக்கும் ஸ்வீட் ஊட்டி ரொம்ப அன்பாக பேசுகிறார். இது எல்லாம் பார்த்து மீனாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே ஷாக் ஆக இருக்கிறது. ஆனால், விஜயா எதற்காக இதை எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை. வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, பார்வதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா, முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து கடுப்பான அருண், சீதாவை அழைக்கிறார். அருண் சொன்ன வேலையை செய்து முடித்தவுடன் சீதா, முத்துவிற்கு ஸ்வீட் கொண்டு வந்து தந்து பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் அருண், சீதாவை அழைக்கிறார். இதை எல்லாம் பார்த்த மீனாவிற்கு கடுப்பாகிறது. பின் முத்து, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

சீரியல் ட்ராக்:

நான் கிளம்புகிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் முத்துவுடன் தான் கிரிஷ் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட மேனேஜர், ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ரோகிணி கடையில் வைத்திருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடுகிறார். அதற்குப்பின் கோவிலில் விஜயா அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார். எல்லோருமே விஜயாவின் செயலை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோயிலுக்கு அன்னதானம் சாப்பிட வந்த பெரியவரை முத்து தான் ரோடு கிராஸ் பண்ணி விடுகிறார். அப்போதுதான் கோயிலில் விஜயா அன்னதானம் செய்வது தெரிகிறது. அதை பார்த்த முத்து வாயடைத்து போனார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full