உண்மை அறிந்து ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, அவமானத்தில் மனோஜ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 27/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களாவுடைய உண்மையான ஓனர் சொன்ன உண்மையை அறிந்து முத்து குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. பின் எல்லோருமே மனோஜை திட்ட, ரோகினி- விஜயா இருவரும் மனோஜ்க்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். பின் பங்களா வாங்க இருந்த இடத்திற்கு சென்று முத்து விசாரித்தார். அதற்குப்பின் ஜீவா கொடுத்த கண்ணாடியை தன்னுடைய மனைவிக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார் முத்து. அப்போது சீதா, இந்த பெண் உங்க கல்யாணத்தில் பார்த்தேன். மனோஜிடம் ரொம்ப நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னவுடன் மீனா- முத்துவுக்கு சந்தேகம் வந்தது.

ஒருவேளை இவர் மனோஜ் உடைய காதலியாக இருப்பாரோ? என்று சந்தேகத்தில் முத்து அவருடைய வீட்டிற்கு போனார். அங்கு விசாரித்த போது தான் ஜீவா, மனோஜ் காதலி என்பது தெரிந்தது. உடனே முத்து அவரிடம் சண்டை போட்டு பணத்தை கேட்க, நான் மொத்த பணத்தையும் போன முறையே வட்டியுடன் செட்டில்மென்ட் செய்துவிட்டேன். அதற்கு சாட்சியே நீதான் என்று ஜீவா சொன்னவுடன் முத்து பழசை நினைத்து பார்த்தார். பின் இந்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்றதற்கு ஜீவா ஒத்து கொண்டார். நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, விஜயாவை நீதிபதிகளாக உட்கார வைத்து, மனோஜை கூண்டில் நிறுத்தி முத்து கேள்வி கேட்டார்.

சிறகடிக்க ஆசை:

அப்போது முத்து, என்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு மனோஜ் ஓட பார்த்தான். அந்த பணத்தை அவரிடம் இருந்து ஜீவா எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால், அந்த பணத்தை மனோஜ் நான்கு மாதத்திற்கு முன்பே வாங்கி இருக்கிறான். இது நாம் யாருக்குமே தெரியாது. அந்த பணத்தை வைத்து தான் ஷோரூம் வைத்தான். இது ரோகினி அப்பா அனுப்பிய பணம் கிடையாது என்று சொன்னவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியானார்கள். மனோஜ்-ரோகினிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

நேற்று எபிசோட்:

உடனே ரோகினி, ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச வேண்டாம் என்றவுடன் ஜீவா உள்ளே வந்தார். பின் அவர், வீட்டில் உள்ள எல்லோரிடம் மன்னிப்பு கேட்டு நடந்ததை சொன்னார். விஜயாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. கோபத்தில் அண்ணாமலை, மனோஜ்- ரோகினையும் திட்டிருந்தார். உடனே விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து எதற்கு இந்த மாதிரி செய்தாய்?என்று கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று மனோஜ் சொன்னவுடன் ரோகினியை பார்த்து விஜயா முறைத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மனோஜ் செல்வதெல்லாம் உண்மையா? என்று ரோகினையை பளார் என்று அடிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

விஜயா அடித்த அடியில் ரோகினி சுருண்டு போய் வேறொரு இடத்தில் நிற்கிறார். என்ன சொல்வது என்று புரியாமல் ரோகினி அழுது கொண்டே நிற்கிறார். விஜயாவும், அவரை மீண்டும் மீண்டும் அடிக்கிறார். கடைசியில் வேறு வழி இல்லாமல் ரோகினி, உண்மையை ஒத்து கொள்கிறார். பின் அவர், அம்மாவாக அவனுக்காக என்ன செய்தீர்கள்? அவன் பெயருக்கு தான் படித்திருக்கிறான். வேலைக்கு போகிற அளவுக்கு திறமை இல்லை. அவன் ரொம்ப சோம்பேறி என்றெல்லாம் மனோஜை தரக்குறைவாக பேசுகிறார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே கோபத்தில் ரோகினி அங்கிருந்து சென்று விடுகிறார். மனோஜ், மீனா இருவரும் ரோகினியை கூப்பிட, விஜயா திட்டி அனுப்பி விடுகிறார். பின் ரவி - சுருதி, முத்து-மீனா நான்கு பேருமே ரோகினி- மனோஜ் செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட மனோஜ்க்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. இதை பற்றி அவர் ரோகினி இடம் கேட்க, அவர் கோபத்தில் கத்துகிறார். மீண்டும் மனோஜ் பற்றி கேவலமாக பேசுகிறார் ரோகினி. இதானால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full