மீனா மீது திருட்டுப்பழி போட்ட விஜயா, கோபத்தில் கொந்தளித்த கோபத்தில் முத்து- சிறகடிக்க ஆசை

By subhashini · 21/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா வைத்து இருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி சிட்டியிடம் கொடுத்தார். பின் புது டீலர், மனோஜுக்கு போன் செய்து பாராட்டி கடையை
இன்னும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்றால் விளம்பரம் எடுக்க வேண்டும். அதற்கு உங்களுடைய குடும்ப ஆட்களை வைத்தே பண்ணுங்கள் என்று இரண்டு லட்சம் பணத்தை தந்தார். தருகிறேன் என்று சொன்னவுடன் மனோஜ் ஒத்துக் கொண்டார். ஆனால், இந்த பணம் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் நடிக்க வைக்கலாம் என்று மனோஜ் திட்டம் போட, ரோகினி சரி என்றார்.

பின் வீட்டில் மனோஜ், டீலர் சொன்ன விஷயத்தை சொல்ல, முதலில் எல்லோருமே மறுத்தாலும் கடைசியில் கடையின் டெவெலப்புக்காக ஒத்துக் கொண்டார்கள். மேலும், சூட்டிங் நடந்தது. டைரக்டர் ஒவ்வொருவருக்கும் டயலாக் கொடுத்து பேச, எல்லோருமே ஆரம்பத்தில் தப்பு தப்பாக பேசியதால் அவர் பயங்கரமாக திட்டி இருந்தார். குறிப்பாக அண்ணாமலையை திட்டுவது முத்துவிற்கு பிடிக்கவே இல்லை. இதனால் முத்து, அவரிடம் சண்டைக்கு போனார். உடனே இயக்குனர் கோபப்பட்டு, யாரும் ஓசியில் நடிக்கவில்லை.

சிறகடிக்க ஆசை:

காசு வாங்கி தானே நடிக்க வந்தீர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்கில் மனோஜை பார்த்தார்கள். பின் வீட்டில் இதை பற்றி எல்லோரும் கேட்க, சூட்டிங் முடிந்து தரலாம் என்று இருந்தேன் என்றார் மனோஜ். ஏன் முன்னாடியே சொல்லவில்லை? என்பதற்கும் அதையே திருப்பி திருப்பி மனோஜ் சொல்ல, முத்து- ரவி இருவருமே மனோஜை அடிக்க போனார்கள். நேற்று எபிசோட்டில் எல்லோரும் இதை பற்றி ரோகினி இடம் கேட்க, அவரும் மனோஜ் சொன்ன பதிலை சொன்னவுடன் பயங்கரமாக கொந்தளித்து கத்தி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

பின் இதை பற்றி அண்ணாமலை பொறுமையாக கேட்க, அவர்கள் வாழைப்பழ கதையை சொன்னதால் அண்ணாமலைக்கே பயங்கர கோபம் வந்துவிட்டது. ஓரு வழியாக பணத்தை ரோகினி எல்லோருக்கும் அனுப்பி விட்டார். மேலும், அந்த பணத்தை மீனா, முத்து வண்டி தவணை கட்டி விட்டார். இன்னொரு பக்கம் பார்வதி பூ கேட்டதால் மீனா கொண்டு போய் தந்தார். மீனா வந்தவுடன் அவரை எல்லோர் முன்னாடியும் கேவலமாக பேசி விஜயா அவமானப்படுத்தி பார்வதி வீட்டு வேலையை செய்ய சொன்னவுடன் மீனாவும் எதுவும் பேசாமல் செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பீரோவில் பணம் இல்லை என்று பார்வதி சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகிறார். ரூமில் ரெண்டு பேருமே நன்றாக தேடிப் பார்க்கிறார்கள். ஆனால், அங்கு பணம் இல்லை. பார்வதி உடைய நகைகள், பணமெல்லாம் இருக்கிறது. ஆனால், விஜயா பணம் மட்டும் இல்லை. கடைசியில் விஜயா மீனா தான் துணி அடுக்கி வைத்தாள். அவள் தான் இந்த வேலையை செய்திருக்கணும் என்று சொன்னவுடன், பார்வதி அப்படி எல்லாம் இருக்காது பழி போடாதே என்று சொன்னார். இருந்தாலுமே விஜயா கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் விஜயாவிற்கு பார்வதி போன் செய்கிறார். அப்போது விஜயா, என்ன பணம் காணவில்லையா?மீனா எடுத்திருப்பார் என்று சந்தேகப்படுகிறாயா? என்று மீனா மீது பழி போடுகிறார். உடனே மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியல. அண்ணாமலை-முத்து கோப்பப்பட்டு மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால், விஜயா கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் மீனா மீது தான் பழி போட்டாள். ரோகினி எதுவும் பேசாமல் உள்ளுக்குள்ளே பயத்தில் அமைதியாக இருக்கிறார். பின் மீனா, முத்து இருவருமே நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருக்கும்போது பார்வதி ஆண்டியிடம் விசாரிக்கலாம் என்று முத்து சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full