சிந்தாமணி வைத்த பார்ட்டியில் அட்ராசிட்டி செய்யும் விஜயா, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தான் எமதர்மராஜா வேடத்தில் வந்தது என்று தெரிந்ததுமே விஜயா திட்டினார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இந்த வேஷம்? ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார்கள். அப்போது டிராமா குரூப்பில் இருந்த நபர், சீக்கிரம் வேசத்தை கழட்டுங்கள். எனக்கு நேரம் ஆகிறது என்று சொன்னவுடன் முத்துவும் அதை எடுத்து கொடுத்தார். விஜயா ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் முத்து தான் போட்ட எமதர்மராஜா வேடத்தை பற்றி மீனாவிடம் பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜயா தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய கனவில், விஜயா இறந்து விட்டார். அண்ணாமலைக்கு வீட்டில் உள்ள எல்லோருமே கட்டாயப்படுத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் தூக்கத்திலேயே விஜயா வேண்டாம், வேண்டாம் என்று கத்தினார். அண்ணாமலை, விஜயாவை எழுப்பி அமைதியாக தூங்கு என்றார். அப்போதான் அது கனவு என்று புரிந்து விஜயா பெருமூச்சு விட்டார். மறுநாள் காலையில் சாமியார் சொன்னது போல் விஜயா சிவப்பு புடவை கட்டியிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு கீரை விற்றுக்கும் பெண்ணுடன் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். கனவில் அண்ணாமலை திருமணம் செய்த பெண் அவர் தான் என்பதால் விஜயா ஷாக் ஆனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அந்தப் பெண்ணை பார்த்து விஜயா பயங்கரமாக திட்டி இருந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆனது? என்று அண்ணாமலை விசாரித்தார். ஆனால், விஜயா உண்மையை சொல்லாமல் அமைதியாக நின்றார். அதற்குப் பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரையும் சாமி ரூமுக்கு அழைத்து சென்று, நீ இனி மனோஜ் ஷோரூமிற்கு போ. நீ பொய்யாக சொன்ன கோடீஸ்வரி என்ற விஷயத்தை உண்மையாக்கு. நீ கோடீஸ்வரி ஆனால் தான் இந்த வீட்டில் மரியாதை என்று ரோகினியை மன்னித்து ஏற்றுக் கொண்டார். இதனால் மனோஜ்- ரோகினி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் அருண், ரிஜிஸ்டர் மேரேஜிக்கு தேவையான எல்லா வேலையும் ஏற்பாடு செய்து விட்டேன் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
சீதா பயமாக இருக்கிறது என்று சொன்னார். அப்போது மீனா, நான் சீதாவிற்காக தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து வந்த சத்யா, நான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணி விட்டேன் என்று சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். மீனா-சீதாவுக்கு ரொம்ப சந்தோசம். பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்ல சத்யா கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் முத்துவின் நண்பர் முருகன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்காக முத்துவை அழைத்தார். அந்த சமயம் வந்த சத்யா, தான் தேர்வில் பாஸ் ஆனதை பற்றி சொல்ல, முத்து சந்தோஷத்தில் எல்லோருக்குமே விருந்து போட என்று கொண்டாடி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணியின் பர்த்டே பார்ட்டிக்கு பாவாடை தாவணி ட்ரஸ் கோடில் பார்வதி- விஜயா இருவரும் போகிறார்கள். இதை பார்த்த மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. முத்து- அண்ணாமலை இருவருமே இந்த கோலத்துடன் போக வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்கவில்லை சந்தோசமாக கிளம்பி போகிறார்கள். பார்ட்டியில் எல்லோரிடமும் விஜயாவை சிந்தாமணி அறிமுகம் செய்து இருக்கிறார். அதற்குப்பின் கேக் வெட்டி சந்தோஷமாக பிறந்த நாள் பார்ட்டியை சிந்தாமணி கொண்டாடுகிறார்.
சீரியல் ட்ராக்:
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சிந்தாமணி வீட்டில் நடக்கிறது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவருமே ஷோரூம்விற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது ரோகினி, விஜயாவுக்கு ஆன்லைனில் புடவை ஆர்டர் செய்த விஷயத்தை மனோஜிடம் சொல்கிறார். அந்த சம்பவம் பார்த்து போன் செய்து ரோகினி அம்மா, கிரிஷ் உன்னிடம் பேச வேண்டுமாம். நேரில் வர முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு ரோகினி வருகிறேன் என்று போனை வைத்துவிட்டு மனோஜிடம் பொய் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது