மீனாவை அசிங்கப்படுத்திய விஜயா குடும்பம், கைதான முத்துவின் நிலை என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனாவை திட்டியதை நினைத்து ரோகினி அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழுதார். அந்த சமயம் பார்த்து வந்த ரோகினி, நீ பேசுனது சரி என்று அவரை பாராட்ட, கோபப்பட்டு அவர் அம்மா, ஏன் இந்த பாவத்தை செய்ய வைத்தாய்? என்று சொல்ல, வழக்கம்போல ரோகினி அவர் அம்மாவை திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட, இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார்.
இதை அறிந்த முத்து, நான் எப்படியாவது எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்த வாரம் சுருதிக்கு வந்த கொரியரை விஜயா பிரித்து பார்த்தார். அந்த சமயம் வந்த ஸ்ருதி, என்னுடைய பார்சலை எதற்கு பிரித்து பார்த்தீர்கள்? என்று கோபப்பட்டு தன் மாமியார் என்று கூட பார்க்காமல் திட்டி விட்டார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே சத்யாவிற்காக கல்லூரிக்கு சென்றார்கள். அங்கு பிரின்ஸ்பலை பார்க்க முடியாது என்று சொன்னவுடன் அங்கிருக்கும் ஒருவரிடம் பிரின்சிபலை பற்றி விசாரித்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில், லாட்டரியில் பணம் அடித்ததாக ஒரு நபர் கடைக்கு வந்து மனோஜை வெறுப்பேற்றி இருந்தார். இதனால் கோபப்பட்ட மனோஜ், அவரை அடிக்க போனார். அந்த நபர் மனோஜுக்கு சாபம் விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, எப்படியாவது சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக நான் குடித்து உன்னை அடிப்பது போல் நடிக்கிறேன். சத்யாவை கல்லூரியில் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல மீனாவும் ஒத்துக் கொண்டார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் கல்லூரி முதல்வர் முன்பு முத்து குடிப்பது போல நடித்து மீனாவை அடித்தார். அந்த சமயம் வந்த சத்யா, நிஜமாகவே தன் அக்காவை மாமா அடிக்கிறார் என்று தடுக்க பார்த்தார். உடனே அந்த கல்லூரி முதல்வர், உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியவில்லை. நீ கல்லூரியில் சேர்ந்து கொள் என்று சொல்ல மீனா-சத்யா சந்தோசப்படுகிறார்கள். ஆனால், முத்து மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதால் அவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. பின் நடந்த உண்மையை மீனா போலீசிடம் சொல்ல, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், முத்துவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா எல்லோருக்கும் போன் செய்து பேசுகிறார். அப்போது ஸ்ருதிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி மீனா உதவி கேட்கிறார். ஸ்ருதி தன்னுடைய அப்பாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ருதி அம்மா, ஒன்னுக்கு ரெண்டு ஆக முத்து அம்மாவிடம் பேசுகிறார். உதவி எதுவும் கிடைக்காததால் மீனா வேதனையில் வீட்டிற்கு வந்துவிட்டார்.
சீரியல் ட்ராக்:
அப்போது வீட்டில் எல்லோருமே ஒன்று கூடி மீனாவை டார்கெட் செய்து பேசுகிறார்கள். உடனே அண்ணாமலை, நீங்கள் நல்லதுக்கே செய்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நீங்கள் பண்ண முறை தப்பு என்று கோபப்பட்டு பேசுகிறார். இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை விடுதலை செய்கிறார்கள். அப்போதுதான் மீனா- சத்யா- சீதா எல்லோருமே நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.