ரோகினி சொன்ன வார்த்தையால் சந்தோஷத்தில் குதித்த விஜயா, அண்ணாமலை செய்த வேலை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் கடையில் திருஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்றார்கள். அதை நம்பி மனோஜ், அந்த புகைப்படத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தார். அதை பார்த்து விஜயா பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். ஆனால், மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். கோபத்தில் விஜயா, இதெல்லாம் மீனா செய்த வேலை தான் என்று வழக்கம் போல அவரை திட்டி இருந்தார். பின் மனோஜின் ஓனர் ஃபோன் செய்து, நல்ல பிராஃபிட் கிடைத்திருக்கிறது என்று சொன்னவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அப்போது வந்த மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது. வாங்கி போடு என்று சொல்ல, மனோஜும் சரி என்றார். இன்னொரு பக்கம் மீனாவை காதலிக்கும் முருகன், நேரடியாகவே முத்து வீட்டுக்கு சென்று அண்ணாமலை இடம் பெண் கேட்க, எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அப்போது வந்த முத்து, இது எங்கள் வீடு. யாரை பார்க்க வந்தாய் என்று சொன்னவுடன், நான் இந்த பெண்ணை தான் காதலிக்கிறேன் என்று மீனாவை காண்பித்தார்.
சிறகடிக்க ஆசை:
இதை கேட்டவுடன் எல்லோருமே அதிர்ச்சி ஆகி இருந்தார்கள். உடனே மீனா, இவர் தான் என்னை பாலோ செய்கிறார் என்று முத்துவிடம் சொன்னார். அதற்கு முருகன், எங்க அண்ணன் சொன்ன ஐடியா தான் பாலோ செய்தேன் என்றார். இதனால் மீனாவிற்கு கோபம் அதிகமாகி இருந்தது. கடைசியில் முத்து, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவள் என் பொண்டாட்டிடா என்று சொன்னவுடன் முருகன் அதிர்ச்சியானார்.
உடனே அவர், முத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
நேற்று எபிசோட்:
இதனால் கோபத்தில் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். அதன் பின் கடையில் பிராஃபிட் வந்ததை வீட்டில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து மனோஜ் சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு பெருமையாக பேசி இருந்தார். உடனே முத்து கிண்டல் அடிக்க, ரோகினி நக்கலாக பதிலளித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில்ரோகினி-மனோஜ் , பிசினஸில் பிராஃபிட் வந்ததால் விஜயாவிற்கு தங்க வளையல் வாங்கி கொடுத்தார்கள். உடனே விஜயா சந்தோஷத்தில் குதிக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு வெறும் வேஷ்டி சட்டையை மட்டும் மனோஜ் கொடுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
வேஷ்டி சட்டையை கொடுத்தார்கள். இதனால் முத்து கோபப்பட்டு மனோஜை திட்டி இருந்தார். அதன்பின் பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி வீட்டில் சொல்ல, விஜயா தலைக்கால் புரியாமல் தாண்டவம் ஆடுகிறார். முத்து-மீனாவால் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார்கள். பின் மீனா, மாடியில் நின்று நடந்தை நினைத்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்து, நாம் கண்டிப்பாக ரூம் கட்டுவோம், வருத்தப்படாதே என்று சொன்னார். பின் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் ரோகினி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று பொருள்களை எல்லாம் கொடுத்துவிட்டு பீச் ஹவுஸ் வாங்குவதை பற்றி சொல்கிறார். அவரும் சந்தோஷப்பட்டார். பின் வீட்டில் எப்படியாவது உண்மையை சொல்லிவிடு என்று சொல்ல, வழக்கம் போல் ரோகினி, அவர் அம்மா மீது கோபப்படுகிறார். அதற்குப்பின் வேலைக்கு அண்ணாமலை கிளம்புகிறார். அப்போது முத்து, வேண்டாம் என்று தடுத்துமே அண்ணாமலை கேட்கவில்லை. இதனால் வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. ஒரு வழியாக அண்ணாமலை வேலைக்கு கிளம்பினார். ஆனால், முத்துவிற்கு மனசே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.