ரோகினி செய்த சகுனி வேலை, சத்யாவை வெளுத்து வாங்கிய விஜயா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜுக்கு புது டீலர் ஆர்டர் கிடைத்தால் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார். பின் இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி அவர்களை வெளியிலேயே தூங்க சொன்னார். இதனால் ரோகினி எப்படியாவது போனை எடுத்துவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.
அந்த சமயம் பார்த்து முத்து தண்ணீர் குடிக்க உள்ளே வர, இதை பார்த்த மீனா அவரை வெளியே கூட்டிட்டு போயி பேசி இருந்தார். முத்து, பார்ட்டியில் நடந்ததையும், மீனாவையும் புகழ்ந்து பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். மீனாவும் அவருடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ரோகினி, போனை எப்படி எடுப்பது என்று புலம்பி தன்னுடைய தோழிக்கு போன் செய்து நடந்ததை பற்றி சொல்லி சொல்லி இருந்தார். நேற்று எபிசோட்டில் முத்து - மனோஜ் - ரவி மூவருமே படிக்கட்டிலேயே தூங்கி இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
இதை பார்த்த அண்ணாமலை அவர்களை எழுப்ப சொன்னார்கள். மூன்று பேரையுமே அவர்கள் மனைவிமார்கள் எழுப்பி அழைத்து வர, அவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை சொல்லி திட்டி அனுப்பி இருந்தார். அதற்குப்பின் மனோஜின் கோட்டில் இருந்த முத்து போனை ரோகினி பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டார். அந்த சமயம் வந்த சப் டீலர்ஸ் மனோஜிற்கு மாலை அணிவித்து அவரை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள். இதெல்லாம் கேட்டு மனோஜ் ரொம்பவே பெருமைப்பட, விஜயா-ரோகினி இருவருமே மனோஜை புகழ்ந்து பேசி சந்தோசப்பட்டார்கள்.
நேற்று எபிசோட்:
வழக்கம்போல் முத்து, மனோஜை கிண்டல் அடுத்து பேசி இருந்தார். பின் வேலைக்கு கிளம்பும்போது போன் காணவில்லை என்று முத்து சொல்ல, மீனாவும் போனை தேடுகிறார். இன்றைய எபிசோட்டில் போனை காணவில்லை என்று வீடு முழுக்க முத்து-மீனா இருவருமே தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகினி மனதுக்குள் சந்தோஷப்படுகிறார். பின் முத்து, செல்வத்திற்கு போன் செய்து போன் காணவில்லை. அதில் தான் வீடியோ இருக்கிறது என்று சொன்னவுடன் அவரும் பதறி போனார்.
இன்றைய எபிசோட்:
உடனே மீனா, என்ன வீடியோ? என்று கேட்க, ஏதேதோ சொல்லி முத்து சமாளிக்கிறார். இதை எல்லாம் கேட்டு ரோகினி அமைதியாகவே இருக்கிறார். பின் பங்க்ஷன் நடந்த இடத்திற்கு முத்து செல்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை பார்க்கப் போகிறார். அப்போது அவர் பிஏவை கடத்தி அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல, ரோகினியும் வீடியோவை சிட்டியின் மொபைலுக்கு அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் மண்டபம் முழுவதுமே முத்து மொபைல் தேடி அலைகிறார். ஆனால், கிடைக்கவே இல்லை.
https://youtu.be/GXNx54KlfNA?si=EGPpI2AwHf3aQh1g
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகினி, சத்யா வீடியோவை விஜயாவிடம் போட்டு காண்பிக்கிறார். பின் உங்கள் நகையை எடுத்தது சத்யா தான் என்று அவரை இன்னும் உசுப்பேத்தி விடுகிறார். ஆத்திரத்தில் கொந்தளித்த விஜயா, மீனா வீட்டிற்கு சென்று அவருடைய தம்பி சத்யாவை பயங்கரமாக போட்டு அடிக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஷயம் எதுவும் தெரியாமல் பதறுகிறார்கள். மீனா தடுத்துமே கேட்காமல் விஜயா சத்யாவை அடிக்கிறார்.