மனோஜுக்கு முத்து வைத்த ஆப்பு, கோபத்தில் விஜயா எடுத்த முடிவால் ஆடிப்போன ரோகினி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா தனது டெக்கரேஷன் பிசினஸுக்காக புது மாடல்களை செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றார். பின் அதை மேனேஜரிடம் மீனா காண்பித்தார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, மீனாவை வம்பிழுத்து இருந்தார். அதோடு சிந்தாமணி ஆட்கள் மீனாவின் மாடல்களை எல்லாம் உடைத்து தூக்கி குப்பையில் போட்டு விட்டார்கள். உடனே கோபத்தில் மீனா, நான் இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று அவர்களிடம் சபதம் போட்டார். மறுபக்கம், வீட்டிற்கு வந்த விஜயாவிடம் பார்வதி, ரோகினிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசி இருந்தார்.
அதோடு ரோகினிக்கு பணம் வந்தவுடன் மனோஜை தனியாக கூட்டிட்டு போய்விடுவார் என்பது போல் பயம் காட்டி இருந்தார் பார்வதி. பின், வேலையை முடித்துவிட்டு அண்ணாமலை வீட்டுக்கு வர, மீனா வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் கூறி வருத்தப்பட்டார். அந்த சமயம் வந்த விஜயா, மீனாவிடம் சண்டைக்கு போனார். நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, தப்பு செய்தது ரெண்டு பேரும் தான். ரோகினியை மட்டும் தண்டிப்பது சரி இல்லை. மனோஜ் உன் மகன் என்று நீ அவனுக்கு சப்போர்ட் செய்யாதே என்று அறிவுரை சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
இதை எல்லாம் கேட்டு விஜயாவும் மனம் மாறினார். இன்னொரு பக்கம் ரோகினி, வித்யாவின் வீட்டில் நடந்ததை நினைத்து அழுது புலம்பி கொண்டிருந்தார். அதன் பின் வீட்டிற்கு வந்த மனோஜிடம் விஜயா, ரோகினி போன் செய்தாளா? எங்கே இருக்கிறாள்? கூப்பிடு என்று சொன்னவுடன் அவரும் போன் செய்தார். ஆனால், ரோகினி போன் எடுக்கவே இல்லை, மனோஜ் மீது இருந்த கோபத்தில் ரோகினி போனை எடுக்காமல் இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் பயந்து போன மனோஜ், தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் செய்து பேசி இருந்தார்.
அதற்கு பின் கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்த பின் தான் மனோஜுக்கு உயிர் மீண்டும் வந்தது. அதற்கு பின் மனோஜ்- ரோகினி இருவரும் அண்ணாமலை-விஜயாவிடம் மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார்கள். கடைசியில் மனமிறங்கிய விஜயா, ரோகினியை மன்னித்து அறிவுரை சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, விஜயா சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
அதற்கு அவர், இதற்கு தீர்ப்பை நான் சொல்கிறேன். இனிமேல் ஷோரூமுக்கு அப்பா தான் ஓனர். அவருடைய பொறுப்பில் தான் ஷோரூம் நடக்க வேண்டும். மனோஜ் இனிமேல் ஏமாறவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது என்று சொன்னவுடன் விஜயா, மனோஜ் உடைய முகமே மாறுகிறது. இது யாராலும் எதுவும் பேசவில்லை. ஸ்ருதி, ரவி, மீனா எல்லோருமே முத்து சொன்னதை சந்தோஷப்பட்டு கைதட்டுகிறார்கள். ஆனால், விஜயாவிற்கு கோபம் அதிகமாகிறது. அதன் பின் ரோகினி, மனோஜ் தனக்கு சப்போர்ட் செய்யாததை பற்றி சொல்லி சண்டை வாங்குகிறார்.
சீரியல் ட்ராக்:
கடைசி வரை மனோஜ், தான் செய்தது தவறு என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ரோகினி மீது தான் கோபப்படுகிறார். அதற்கு பின் விஜயா, ரோகினி- மனோஜிடம் பேசுகிறார். அப்போது விஜயா, நீங்கள் அந்த 27 லட்சம் பணத்தை கொடுத்து விட்டால் முத்துவின் ஆட்டத்தை அடக்கிவிடலாம். நீ எப்படியாவது உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்தை வாங்கி கொடு என்று ரோகினிக்கு ஆர்டர் போடுகிறார். அதிர்ச்சியில் ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. மறுநாள் காலையில் ஷோரூம் போவதற்கு முத்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.