ஆத்திரத்தில் மனோஜ்- ரோகினியை பிரிக்க விஜயா செய்த வேலை, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 29/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, ஜீவாவை விசாரிக்க உண்மை தெரிந்தது. பின் முத்து அவரிடம் சண்டை போட்டு பணத்தை கேட்க, நான் மொத்த பணத்தையும் போன முறையே வட்டியுடன் செட்டில்மென்ட் செய்துவிட்டேன். அதற்கு சாட்சியே நீதான் என்று ஜீவா சொன்னவுடன் முத்து பழசை நினைத்து பார்த்தார். பின் வீட்டில் அண்ணாமலை, விஜயாவை நீதிபதிகளாக உட்கார வைத்து, மனோஜை கூண்டில் நிறுத்தி முத்து கேள்வி கேட்டார். அப்போது முத்து, மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை பற்றி சொல்லி இருந்தார். இதனால் மொத்த பேருமே அதிர்ச்சியானார்கள்.

உடனே ரோகினி, ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச வேண்டாம் என்றவுடன் ஜீவா உள்ளே வந்தார். பின் அவர், வீட்டில் உள்ள எல்லோரிடம் மன்னிப்பு கேட்டு நடந்ததை சொல்ல, விஜயாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. கோபத்தில் விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து எதற்கு இந்த மாதிரி செய்தாய்?என்று கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று மனோஜ் சொன்னார். இதனால் ஆத்திரத்தில் விஜயா, ரோகினையை பளார் என்று அடித்தார். என்ன சொல்வது என்று புரியாமல் ரோகினி அழுது கொண்டே இருந்தார். விஜயாவும், அவரை மீண்டும் மீண்டும் அடித்தார்.

சிறகடிக்க ஆசை:

கடைசியில் வேறு வழி இல்லாமல் ரோகினி, உண்மையை ஒத்து கொண்டு, அம்மாவாக அவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? அவன் வேலைக்கு போகிற அளவுக்கு திறமை இல்லை. அவன் ரொம்ப சோம்பேறி என்றெல்லாம் மனோஜை தரக்குறைவாக பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடித்தார். பின் ரவி - சுருதி, முத்து-மீனா நான்கு பேருமே ரோகினி- மனோஜ் செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்ட மனோஜ்க்கு ரொம்ப அவமானமாக இருந்தது. பின் இதை பற்றி அவர் ரோகினி இடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கோபத்தில் ரோகினி, மனோஜை திட்டி வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.
பின் இதைப் பற்றி மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் இன்னும் கோபமாக ரோகினியை திட்டி இருந்தார். உடனே அண்ணாமலை, நீ ரோகினியை அடித்து இருக்கக்கூடாது. உன் மகன் செய்ததும் தவறு தான் என்று சொல்ல, ரொம்ப ஆக்ரோஷமாக விஜயா பேசினார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுதார்.

சீரியல் ட்ராக்:

அவரும் ரோஹினிக்கு ஆறுதல் சொல்லி அறிவுரை செய்தார். இதனால் ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்தவுடன் தான் மனோஜ்க்கு நிம்மதி ஆனது. ஆனால், விஜயா மட்டும் கோபத்திலேயே இருந்தார். அதோடு அந்த கோபத்தை எல்லாம் மீனா மீது காண்பித்துக் கொண்டிருந்தார். அதோடு மனோஜ் - ரோகினி இருவரையும் பேச விடாமல் விஜயா தடுத்தார். பின் ரோகினி, மன்னிப்பு கேட்டு விஜயாவிடம் பேச வரும்போது அவர் இன்னும் ஆக்ரோஷத்தில் ரோகினியை திட்டி விட்டார்.

https://www.youtube.com/watch?v=Mrt3S-VeLws

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ், எவ்வளவு நேரம் கதவு தட்டியுமே ரோகினி வெளியே வரவில்லை. இதனால் பயந்து கொண்டு தன்னுடைய அம்மாவிடம் சொல்கிறார். முத்து- மீனாவும் என்ன ஆச்சு? என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். விஜயா, வேகமாக கதவைத் தட்டியவுடன் வெளியே வந்த ரோகினி, அசந்து தூங்கி விட்டேன் என்று சொல்கிறார். பின் அவர் ரோகினியை திட்டி விட்டு மனோஜை வேலைக்கு கிளம்பு என்று சொல்கிறார். அதோடு இருவரையும் பேச விடாமல் விஜயா தடுக்கிறார். பின் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ரோகினியை சாப்பிட கூப்பிட்டார்கள். உடனே விஜயா, நீ சாப்பிடாதே எழுந்து நில் என்கிறார். எல்லோரும் சாப்பிட சொல்லியும் ரோகினி, அத்தை சொல்லும் வரை நான் சாப்பிடவில்லை என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full