மாத்தி மாத்தி வசியம் செய்யும் விஜயா-ரோகினி, முத்து வைத்த ஆப்பு - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 3/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, இது சிந்தாமணி தான் செய்தார் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே ரவி, அவர்கள் வீட்டில் தான் பணத்தை எடுத்தோம் என்று சொன்னவுடன் விஜயாவால் எதுவும் பேச முடியவில்லை. கடைசியில் அண்ணாமலை, நீ சிந்தாமணி உடன் இருக்கும் நட்பை விட்டுவிடு என்று அறிவுரை சொன்னார். ஆனால் விஜயா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் மீனா, பணத்தை எடுத்துக்கொண்டு சீதாவை பார்க்கப் போனார். அங்கு சீதாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு நடந்ததை சொன்னவுடன் அவர் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் சீதா, கோவிலுக்கு வந்த அருணிடம் பணத்தை கொடுத்து நடந்ததை சொன்னார்.

அதற்கு பின் ஸ்ருதி- ரவி வேலை செய்யும் ஹோட்டலில் நீத்து, youtube ரிவியூவர் வருகிறார். நம்முடைய ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ரிவ்யூ கொடுத்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்தார்கள். அப்போது வந்த மீனா, நன்றி சொல்லும் விதமாக சுருதி, ரவிக்கு வாழைப்பூ வடை, பூசணியில் ஸ்வீட் செய்து தந்தார். அதற்குப்பின் வந்த ரிவியூவருக்கு மீனா செய்த சாப்பாட்டை சுருதி கொடுத்தார். அதை வர் சாப்பிட்டு ரொம்பவே பாராட்டி ஹோட்டலை பற்றி ரிவியூ சொல்லியிருந்தார். சந்தோஷத்தில் நீத்து அவர்களுக்கு பணத்தை பரிசாக கொடுத்தார். பின் இதை வீட்டில் சுருதி, ரவி இருவரும் சொல்லி மீனாவிற்கு பணத்தை கொடுத்து சந்தோஷப்பட்டார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் பார்வதியை சந்தித்த ரோகினியை, எப்படியாவது மனோஜ்-என்னையும் சேர்த்து வையுங்கள் என்று பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜயா வீட்டிற்கு வருவதால் ரோகினி ஒளிந்து கொண்டார். அப்போது விஜயா, நீ கேரளா மந்திரவாதியை வரவை. வசியம் வைத்து ரோகினி-மனோஜ் இருவரையும் பிரிக்கணும். நான் நல்ல பணக்காரப் பெண்ணா பார்த்து என் மகனுக்கு கல்யாணம் செய்யணும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே பார்வதி, விசாரித்து சொல்கிறேன் என்று ஏதோ பேசி விஜயாவை அனுப்பி விட்டார். அதற்குப்பின் ரோகினி, அந்த கேரளா பூசாரியின் நம்பரை எனக்கு கொடுங்கள்.

நேற்று எபிசோட்:

அவர் மந்திரம் பலிக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் வித்யாவை காதலிக்கும் முருகன், புதிதாக வீடு வாங்குவதற்கு அவரை அழைத்தார். அப்போது வித்யா, நான் என்னுடைய காதலுக்கு உதவியவரை அழைத்து வருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, பணத்தை ஏமாற்றிய கதிரை பார்த்து பாலோ செய்தார் ஆனால், அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அதற்குப்பின் மீனா, வித்யாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது வித்யா, மீனாவை வெளியே கூப்பிட்டார். அதற்கு அவர், நானும் வருகிறேன். இருந்தாலும் உங்கள் தோழி ரோகினியை வரவையுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சொன்னார். அதற்கு பின் வீட்டுக்கு வந்து ரோகினி, வீட்டுக்கு மீனா வந்ததை பற்றி கேட்டு கோப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி, விஜயா இருவருமே வசியம் பண்ண சாமியாரை பார்க்க போகிறார்கள். அங்கு விஜயா, என் மகன், மருமகளையும் பிரிக்கணும். அவள் எங்கள் வீட்டிற்கு நிறைய பிரச்சனை செய்கிறார் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் ரோகினியை பற்றி சொல்லி மந்திரச்ச கயிறு ஒன்றை வாங்கிக் கொள்கிறார். அதற்குப்பின் விஜயா, ரோகினி- மனோஜ் பிரித்தவுடன் முத்து-மீனாவையும் பிரிக்கணும் என்று சொல்கிறார். உடனே பார்வதி, இது தேவையில்லாத வேலை. அவர்களை எதற்கு பிரிக்கணும், அதெல்லாம் செய்யாதே என்று திட்டுகிறார். அதற்குப்பின் அதே சாமியாரை பார்க்க ரோகிணி வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அவர், என்னையும் என் புருஷனையும் என் மாமியார் பிரிக்க பார்க்கிறார். அவரையும் அவர் அம்மாவையும் பிரிக்கணும் என்று ரொம்ப எமோஷனாக பேசினார். உடனே அந்த சாமியார் ஒரு மந்திரத்தை கயிறை கொடுக்கிறார். இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க முருகன் வருகிறார். வரும் வழியில் அவர் ரோகினி ஏமாற்றிய கதிரை அழைத்துக் கொண்டு வருகிறார். கதிர், முத்து கண்ணில் படவில்லை. கடைசியில் விஜயா, கயிறை சாமி ரூமில் வைத்து இருக்கிறார். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, சாமி ரூமில் இருக்கும் கயிறை பார்த்து அண்ணாமலைக்கு கட்டி விடுகிறார். அப்போது விஜயா, இந்த கயிறை எதற்கு கட்டினீர்கள்? இது மனோஜ்க்கு வாங்கினது என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், முத்து- அண்ணாமலை விடாமல் பதில் கொடுக்கிறார்கள். விஜயாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full