மனோஜை வறுத்தெடுக்கும் விஜயா, வேதனையில் ரோகினி, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் கேட்கவில்லை. ஊதிதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். பின் அங்கிருந்த போலீஸ், முத்து இடம் விசாரித்துவிட்டு ஊதிவிட்டு செல் என்று சொன்னார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அம்மா வீட்டில் புதிய ஆர்டரை பற்றி சொன்னார். உடனே சீதா, என்னிடம் பணம் இருக்கிறது. நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தன்னுடைய அக்காவிற்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும், கோபத்தில் முத்து நன்றாக நிறைய குடித்துவிட்டு செல்வத்தை வரவைத்தார்.
நான் ஓட்டினால் தான் பிரச்சனை. நீ ஒட்டிக்கொண்டு போ, அந்த போலீசை வெறுப்பேத்தியே ஆகணும் என்று சொன்னார். பின் அருண் இருக்கும் இடத்திற்கு வந்த முத்து, நான் நன்றாக குடித்து இருக்கிறேன். ஆனால், நான் வண்டி ஓட்டவில்லை என்று ரொம்பவே கிண்டலாக பேசி இருந்தார். அருணுக்கு அதிகமாக கோபம் வந்தது. பின் அங்கிருந்த போலீஸ் அருணை சமாதானம் செய்து முத்து, செல்வத்தையும் திட்டி அனுப்பி விட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த முத்து குடித்திருப்பதை தெரிந்து மீனா கோபப்பட்டார். முத்து நடந்ததை சொல்ல மீனாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.
சிறகடிக்க ஆசை:
அருண் இடம் சீதா தன் அக்காவுக்காக பண உதவி கேட்டார். அருணுமே மறுப்பு தெரிவிக்காமல் உதவி செய்ய ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து குடித்திருந்ததால் மீனா கோபப்பட்டு பேசாமல் இருந்தார். ரவி, முத்துவிற்கு அட்வைஸ் செய்தார். இருந்துமே முத்து கேட்டுக் கொள்ளவில்லை. பின் மீனா, சீதாவை பார்க்க கிளம்பி வந்தார். அப்போது சீதா, பணம் ரெடி பண்ண விஷயத்தை சொல்லி தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து விட்டார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் சுருதி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த ரெண்டு நபர்கள் ரொம்ப மோசமாக ஸ்ருதியிடம் பேசி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இதனால் கோபப்பட்ட ஸ்ருதி அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மிளகாய் பொடியை போட்டுக் கொடுத்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட உடன் ஹோட்டலையும் சுருதியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நீத்து, ரவி இருவருமே என்ன நடந்தது? என்று விசாரிக்காமல் சுருதியை தான் திட்டி இருந்தார்கள். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வந்தது . இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் உடல்நிலை முடியாமல் அவஸ்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து உதவி செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி ரொம்ப எமோஷனலாக மனோஜிடம் பேசுகிறார். இருந்தாலுமே, மனோஜ் தன் அம்மா மீது இருந்த பயத்தில் ரோகினி இடம் சரியாக பேசவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா, முத்து வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை, முத்துவிற்கு ஃபோன் செய்து பேசு என்று அறிவுரை செய்கிறார். முத்து சவாரிக்கு போவதால் வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் சுருதி ரெஸ்டாரண்டில் நடந்ததை நினைத்து ரவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது போன் செய்த நீத்து, நான் அங்கு ஓனராக நடந்து விட்டேன். நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று மன்னிப்பு கேட்கிறார். இதை கேட்டவுடன் ரவிக்கு எதுவும் பேச முடியவில்லை. பின் சுருதி, ரவி இடையே இருந்த சண்டையும் நார்மல் ஆகிவிட்டது. மறுநாள் காலையில் ரோகினி, மனோஜ்காக கஞ்சி செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து விஜயா, எதற்கு என்று கேட்க, மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார். பின் மனோஜை பார்த்து விஜயா பேசுகிறார். அப்போது மனோஜ், ரோகினி இடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ? என்று சொல்கிறார். உடனே கோபப்பட்ட விஜயா, மனோஜை திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது