குடித்துவிட்டு அருண் வீட்டில் ரகளை செய்யும் முத்து, ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகள் முத்து உடைய லைசென்சை கேன்சல் செய்ய முடிவெடுத்தார்கள். முத்து எவ்வளவு சொல்லியுமே அங்கு இருக்கும் போலீஸ் கேட்கவில்லை. இதனால் அருண் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா தான் எடுத்த வீடியோவை முத்து குடும்பத்திற்கு அனுப்பி விட்டார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். வழக்கம் போல் ரோகினி, மனோஜ், விஜயா எல்லோருமே முத்துவை திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் உண்மை அறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனாவிடம் முத்து உண்மையை சொன்னார். இருவருமே போலீஸிடம் பேசி இருந்தார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. அதனால் முத்து-மீனா கிளம்பி விட்டார்கள்.
அதற்குப்பின் முத்து காரை எடுத்து வந்த போலீஸ் அதிகாரிக்கு அடிப்பட்டு விட்டது. அப்போது அவர், முத்து சொன்னது உண்மைதான். அந்த காரில் பிரேக் இல்லை. மெக்கானிக்கல் தான் சரி செய்தார் என்று சொன்னார். உடனே அருண், இந்த உண்மையை சொல்ல வேண்டாம். அவன் ரொம்ப திமிர் பிடித்தவன். அவன் ஆறு மாதம் லைசன்ஸ் இல்லாமல் இருக்கட்டும் என்று முத்துவை பழிவாங்க நினைத்தார்.
கடைசியில் வீட்டிற்கு வந்த முத்து,மீனாவை பார்த்து ஸ்ருதியின் அம்மா ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதற்கு விஜயாவும் சப்போர்ட் செய்தார். உண்மை என்னவென்று தெரியாமல் ஸ்ருதியின் அம்மா முத்துவையும், அவர் குடும்பத்தையுமே தரைகுறைவாக பேசி இருந்தார். இதனால் மீனா கோபப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று 66எபிசோட்டில் கோபத்தில் மீனா, என்ன நடந்தது என்று தெரியாமல் உங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச தேவையில்லை. அவருடைய கார் பிரேக் பிடிக்கவில்லை. குழந்தைகள் எதிரே வந்தார்கள் வேறு வழி இல்லாமல் தான் அந்த வண்டியின் மீது அவர் மோதினார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இதே அவருக்கு அடிபட்டிருந்தால் என்ன ஆவது? என்று பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. ஆனாலும் ஸ்ருதியின் அம்மா, மனோஜ் எல்லாமே கிண்டலாக பேசி இருந்தார்கள். உடனே கோபத்தில் அண்ணாமலை, மனோஜை திட்டி விட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மீனா, நீங்கள் ஸ்ருதி- ரவியை இங்கிருந்து பிரித்துக் கூட்டிட்டு போக தான் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டவுடன் விஜயா கோபப்பட்டார். அதற்குப்பின் சுருதி, நீங்கள் தயவு செய்து எங்கள் வீட்டு விசயத்தில் தலையிடாதீர்கள், இங்கிருந்து கிளம்புங்கள் என்று தன்னுடைய அம்மாவை திட்டி அனுப்பி விட்டார். வீட்டில் உள்ளவர்களுமே முத்துவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்கள் அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த போலீசை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். அவரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, முத்து வேண்டும் என்று தான் வண்டியை மோதினார் என்று சொன்னார்கள். பின் அந்த போலீஸ், நான் தீவிரமாக விசாரித்து உங்களுக்கு உண்மையை சொல்கிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து- மீனா இருவரும் எப்படி ஆவது லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது விஜயாவிடம் மனோஜ், ரோகினி தன்னை பார்க்க கடைக்கு வந்த விஷயத்தை சொன்னவுடன் விஜயா கோபப்படுகிறார். பின் விஜயா, எதற்காக கடைக்கு போனாய்? இனிமேல் அவனை பார்க்க சென்றால் நடப்பதே வேறு என்று ரோகினியை திட்டி விடுகிறார். பின் ரோகினி, நம்முடைய விஷயத்தை எதற்காக உன் அம்மாவிடம் சொல்கிறாய். நமக்கென்று ஒரு பர்சனல் இருக்காது. எனக்காக சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். ஆனால், மனோஜ் அதை பற்றி எல்லாம் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் ரோகினி, அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து லைசன்ஸ் போனதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய நண்பர்கள் சரக்கு வாங்கி கொடுத்து அவரை கட்டுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்கள். பின் குடித்துவிட்டு முத்துவை அருண் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அங்கு முத்துவின் நண்பர்கள் கல் எடுத்து அருண் வீட்டின் முன்பு அடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து அருண் மொபைலில் ரெக்கார்ட் செய்கிறார். பின் வெளியே வந்த அருண், முத்துவிடம் பேசுகிறார். முத்து-அருண் இடையே கோபமாக வாக்குவாதம் நடக்கிறது. இதையெல்லாமே முத்து வாக்குவாதம் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.