ஏற்கனவே கல்யாணம் ஆகி கர்ப்பமாக இருந்தாயா? மனோஜ் கேள்வியால் உறைந்து போன ரோகினி-பரபரப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 9/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கிரிஷ் பிறந்த நாளுக்காக, கேக் வெட்டி கொண்டாட ரோகிணி சென்று இருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போக உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார். பின் கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து விசாரித்தார். இறுதியில் தனது மகள் பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்லிவிட்டார். ஆனால், ரோகிணி தான் தனது மகள் என்று அவர் சொல்லவில்லை.

மேலும், கிரிஷ் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து முத்து-மீனா கிளம்பி விட்டார்கள். அதற்குப் பின் ரோகினி தனது அம்மாவிடம், முத்து- மீனாவிடம் போனில் கூட பேசக்கூடாது என்று எச்சரித்து இருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மினா இருவரும் கிரிஷை தத்து எடுக்க வேண்டும் என்று ஒரு கோவிலில் சீட்டு குலுக்கி போட, வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்பட்டார். ஆனால், முத்து சமாதானம் செய்கிறார். பின் விஜயாவின் நடன வகுப்பிற்கு புதிய காதல் ஜோடி சேர்ந்து இருந்தார்கள். இவர்கள் சந்திப்பதற்கு விஜயா வகுப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை:

பின் வீட்டில் முத்து- மீனா, கிரிஷை குறித்து அனைவரிடமும் சொல்ல, விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக கிரிஷ் அம்மாவை பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கேட்டு வருத்தப்பட்டு இருந்தார். கடைசியில் முத்து, கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நிற்கிறார். ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார்.

சீரியல் கதை:

இதை மீனா வீட்டில் சொல்ல மனோஜ், விஜயா கிண்டல், கேலியாக பேசி இருந்தார்கள். பின் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் ஆகி இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். பின் ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து சீதா வேலைக்காக அதே ஹாஸ்பிடலில் வந்திருந்தார். பின் வேலை கிடைத்த சந்தோஷத்தை மீனாவிடம் போன் செய்து சொல்லும்போது தான் ரோகினியை மருத்துவனமனையில் பார்த்த விஷயத்தை சீதா சொல்லி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோடில், ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு மீனா ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுக்க விஜயா, மனோஜ் கிண்டலடித்து பேசுகிறார்கள். அதற்கு மீனா , நம்ம வீட்டுக்கு குழந்தை வர போகுது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனால் தான் ஸ்வீட் செய்தேன் என்று மீனா சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை. யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கோபமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு மீனா, நீங்கள் குழந்தைகள் ஆஸ்பிட்டல் போனீர்கள் இல்லையா? என்று கேட்க, ஹாஸ்பிடல் போனால் கர்ப்பமா? எதற்கு தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் என்று கோபப்பட்டு ரோகிணி கத்துகிறார். உடனே விஜயா வழக்கம்போல் மீனாவை தான் திட்டுகிறார். பின் ரோகினி, ரூமில் நாம் இருவரும் ஹாஸ்பிடல் போய் ஒரு முறை செக் பண்ணிக்கலாம் என்று கேட்க, மனோஜ் நான் சரியாகத்தான் இருக்கிறேன். எதற்கு தேவையில்லாமல் ஹாஸ்பிடல் போகணும் என்று கேட்கிறார். உடனே ரோகினி, நீயும் ஜீவாவும் லிவிங்கில் இருந்ததால் ஜீவா கர்ப்பம் ஆகலையா? கேட்க மனோஜ் கோபத்தில் நீ கல்யாணம் பண்ணி கர்ப்பம் ஆனாயா? என்று இருவருமே சண்டை போடுகிறார்கள். பின் இந்த விவகாரம் விஜயாவிற்கு தெரிந்து ரோகினியை பயங்கரமாக திட்டுகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full